தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

ஈ.பி.டி.பியினரே வெளியேறுங்கள்! இல்லையேல் வெளியேற்றுவோம்! விஜயகலா மகேஸ்வரன் போர்க்கொடி

பிரத்தியேக செயலாளரால் அதிகாரங்களை இழந்த ருவான் விஜேவர்தன
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 01:36.24 PM GMT ]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடம் இருந்து முப்படைகளுக்கு பொறுப்பான விடயங்களை ஜனாதிபதி அவசரமாக நீக்கியுள்ளார்.
ருவான் விஜேவர்தனவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றும் அனுஷி ஜயவர்தனவின் ஒப்பந்தமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அனுஷி ஜயவர்தன, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நெருங்கிய உறவினராவார்.
கொழும்பு வர்த்தகர்கள் மத்தியில் பிரலமான பெயரை சம்பாதித்துள்ள அனுஷி, அமைச்சர் விஜேவர்தனவின் பிரத்தியேக செயலாளர் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து பிரபல ஆயுத விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளதாக பேசப்படுகிறது.
அனுஷியின் வர்த்தக பங்களாராக நிமல் குக் என்பவர் இருந்து வருகிறார். இவர் பிரபல நிறுவனம் ஒன்றில் பொறுப்பில் இருந்து வருகிறார்.
தரகு பணம் குறித்து மேலதிக தகவல்களை நிமல் குக்கிடம் பேசிக்கொள்ளுமாறு அனுஷி, ஆயுத விற்பனை நிறுவனங்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் இணைப்புச் செயலாளராக பணியாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொடவின் சகோதரர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஏற்படுத்திய அழுத்தங்களும், விஜேவர்தனவின் அதிகாரங்களை குறைக்க காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfv6.html

ஈ.பி.டி.பியினரே வெளியேறுங்கள்! இல்லையேல் வெளியேற்றுவோம்! விஜயகலா மகேஸ்வரன் போர்க்கொடி
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 12:55.01 PM GMT ]
யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி வாழவும், ஜனநாயகம் நிலைபெறவும் ஈ.பி.டி.பி குறித்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல் நாங்களாகவே அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
 ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்களின் இயல்பு வாழ்க்கையினை குழப்புபவர்கள் ஈ.பி.டி.பியினரே.
இந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள், காணாமல் போன சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
எனவே இந்தப் பகுதியில் இருக்கும் ஈ.பி.டி.பியின் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். அவர்கள் மூடாதவிடத்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
இவர்கள் இங்கிருந்து வெளியேறுவதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும். எனவே ஈ.பி.டி.பி தாங்களாகவே வெளியேறாவிட்டால் மைத்திரி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக மூடுவதே எமது நோக்கம்.
எனவே இந்த நடவடிக்கைக்கு மக்களும் அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfv3.html

Geen opmerkingen:

Een reactie posten