[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 01:11.08 PM GMT ]
பத்தரமுல்லையில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த பதவியை முன்னர் வகித்து வந்ததுடன் அதனை ராஜினாமா செய்திருந்தார்.
தேசிய அமைப்பாளர் பதவிக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அவர் சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும வகித்து வந்த பொருளாளர் பதவி, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.பி. நாவின்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னாள் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தொடர்ந்தும் அந்த பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவினால், சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது, சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfv4.html
ரணில் – மகிந்த கூட்டா – ஜனாதிபதி சந்தேகத்தில்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 01:47.51 PM GMT ]
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்ற நாளில் இருந்து கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கம் ஊடக கண்காட்சிகளை நடத்தியதே தவிர உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என எழுந்து வரும் குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதியின் இந்த சந்தேகத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கண்ணுக்கு தெரிந்த மற்றும் உறுதிப்படுத்தக் கூடிய சாட்சியங்கள் இருந்தும் கடந்த 30 நாட்களாக அரசாங்கம் எந்த பொறுப்புக்கூற வேண்டிய நபர்களையும் இதுவரை கைது செய்யவில்லை.
இது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நிலைமை இவ்வாறு நீடித்துச் சென்றால், விருப்பமின்றியேனும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த நேரிடும் என மிகவும் அதிருப்தியில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfwy.html
Geen opmerkingen:
Een reactie posten