தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 februari 2015

மைத்திரிபால இந்தியா செல்லும் முன்னர் தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்!

புதிய பிரதம செயலாளர் முதல்தடவையாக மாகாண அமர்வில் பிரசன்னம்!
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 02:42.10 PM GMT ]
புதிய பிரதம செயலர் பத்திநாதன் இன்று வடக்கு மாகாண சபைக்கு முதல் தடவையாக வருகை தந்து சபை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
வடக்கு மாகாண சபையின் 24 வது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது.
இன்றைய அமர்விற்கு வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலர் பத்திநாதன் வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 27ம் திகதி வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக பத்திநாதன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது



ஆனந்த குமாரசுவாமி மாவத்தை ஜனாதிபதியால் மீண்டும் திறந்து வைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 03:49.13 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பெயர் மாற்றம் பெற்ற “நெளும் பொக்குன” வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி வீதியாக பெயர் மாற்றம் பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோட்டன் சுற்றுவட்டத்தில் இருந்து பொது நூலகம் வரையான வீதிக்கு நெலும் பொக்குன மாவத்தை என பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதி முன்னர் காணப்பட்ட ஆனந்த குமாரசுவாமி வீதி என்ற பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கொழும்பு மேயர் முசம்மில், அமைச்சர்களான கரு ஜயசூரிய, சுவாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆனந்த குமாரசுவாமி இலங்கைக்குப் பெருமை சேர்த்த ஆசியாவின் சிரேஷ்ட அதி உயர் வரலாற்று மகானாவார்.
இருந்தபோதும் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சியின் அதிகாரத்தினால் அப்பெயரை நீக்கி விட்டு தன்னுடைய பெயரை வீதிக்கு சூட்டியிருந்தார்.
இந்த நிலையி் புதிய அரசாங்கம் மீண்டும் பழைய பெயரை இட்டமை வரவேற்கத்தக்க விடயமென மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdix7.html

ஆபிரிக்கா நாட்டில் இலங்கையர் இருவர் மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 04:07.04 PM GMT ]
ஆபிரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டில் இலங்கையர் இருவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நச்சுவாயுவை நுகர்ந்ததனாலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேருவளையைச் சேர்ந்த குறித்த இருவரும், அறையின் கதவுகளை மூடிக்கொண்டு தூங்கச் சென்றிருந்த நேரத்திலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வன்முறைகளைத் தடுக்க தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: தினேஸ் குணவர்தன
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 04:09.41 PM GMT ]
தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளை தடுக்க தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் பின்னர் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின், தேர்தல் ஆணையாளருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
தேர்தலை தேர்தல் ஆணையாளரே நடாத்துகின்றார்.
தேர்தலின் பின்னர் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் கட்சி பேதமின்றி பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.  எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் தேர்தலின் பின்னரான வன்முறைகளை தடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டிருக்கவில்லை.
எனவே தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்களை அதிகரிப்பதன் மூலம் வன்முறைகளை தடுக்க முடியும் என தினேஸ் குணவர்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdhoz.html

மைத்திரிபால இந்தியா செல்லும் முன்னர் தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்!
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 04:13.50 PM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 15ம் திகதியன்று இந்தியாவுக்கு செல்லும் முன்னர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 87 படகுகளும் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய செய்தித்தாள் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சட்டமுனைப்புக்கள் தற்போது ஊர்காவற்றுறை, மன்னார், பருத்தித்துறை, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் குறித்த படகுகளை விடுவிப்பதில் ஆட்சேபனையில்லை என்று சட்டமா அதிபரின் சார்பில் நீதிமன்றத்தில் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் நீதிமன்றங்களும் படகுகளை விடுவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 படகுகளை விடுவிக்க இந்தியாவும் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdho0.html

Geen opmerkingen:

Een reactie posten