தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 10 februari 2015

போர்க்குற்றத்தை விசாரணை செய்ய வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை: நியூயோர்க் டைம்ஸ்

தமது முறைப்பாடு தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்ற மேர்வின் சில்வா!
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 04:21.07 PM GMT ]
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தாம் கொடுத்த முறைப்பாடு தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்த அறிந்து கொள்வதற்காக மேர்வின் சில்வா குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வருவதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொலைகள், ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேர்வின் சில்வா சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தாயக தலைவர்களும் புலம்பெயர் சமூகமும் இணைந்து செயற்பட வேண்டிய காலமிது!- வி.உருத்திரகுமாரன்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 04:25.09 PM GMT ]
சவால் மிகுந்த இக்காலத்தில் எமக்கான நீதியினை வென்றடைவதற்கு, தமிழீழத் தாயக அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழ் அரசியற் சமூகமும் கூட்டாக வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டிய காலம் இதுவென, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.
சிறிலங்கா ஆட்சி மாற்றம் - ஐ.நா மனித உரிமைச்சபை - தமிழினப்படுகொலைக்கு பரிகார நீதி ஆகிய விடயங்களை மையப்படுத்தி, சுவிஸ் சூரிச்சிலும், பிரித்தானியா லண்டனிலும் இடம்பெற்ற சமகால அரசியற் பொதுக்கூட்டத்தில் கருத்துரையினை வழங்கும் பொழுதே இக்கூற்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இணையவழி காணொளிவாயிலாக கருத்துரையினை வழங்கிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், 1983ம் கறுப்பு யூலை இனக்கலவரம் தொடர்பில் எந்தக் கட்சி செய்திருந்தாலும், யார் செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியினை சிறிலங்கா அரசு, இன்றுவரை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
அதுபோன்றே மீண்டும் இன்று அனைத்துலக சமூகத்தினை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ் பெண்கள், தாய்மார்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வுகள் குறித்து இன்றுவரை விசாரணை நடத்தப்படவில்லை.
சந்திரிகா ஆட்சிக்காலத்தில் 1995ம் ஆண்டு கோணேஸ்வரிக்கு நடந்த பாலியல் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எந்தவித விசாரணையும் இன்னுமில்லை.
அதே சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றுமொரு சம்பவமான சாரதம்பாளுக்கு நடந்த பாலியல் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எந்தவித விசாரணையும் இன்னுமில்லை
செம்மணிக்கு படுகொலைக்கும் இதுவரை எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை.
இவற்றையெல்லாம் மூடிமறைத்துக் கொண்டு மீண்டும் உள்ளக விசாரணை குறித்து சிறிலங்கா பேசுவது, அனைத்துலக விசாரணையினை இல்லாதொழிக்கின்ற தந்திரோபாயங்களில் ஒன்றாகவே உள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இடித்துரைத்தார்.
சிங்களத்தின் அரச கட்டமைப்பின் மூடிமறைப்புக்களை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தியவாறு, அனைத்துலக விசாணை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என தெரிவித்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தாயக அரசியல் தலைவர்களும் புலம்பெயர் தமிழ் அரசியற் சமூகமும் கூட்டாக வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டிய காலம் இதுவெனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdho2.html

போர்க்குற்றத்தை விசாரணை செய்ய வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை: நியூயோர்க் டைம்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 04:59.44 PM GMT ]
இலங்கையை புதிய நம்பிக்கையுடன் இட்டு செல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதக்காலத்துக்கு முன்னர் சர்வதிகாரத்தை தோற்கடித்து, ஊழல்களை ஒழிக்கும் வகையில் எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலங்கை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.
இந்தநிலையில் பழைய காயங்களை அவருடைய அரசாங்கம் உடனடியாக திறக்க விரும்பவில்லை.
இதனை கருத்திற்கொண்டே எதிர்வரும் மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்படவுள்ள இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை காலம் தாமதிக்க கோருவதாக நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம், படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்து தரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் குடியியல் ஆளுநர் ஒருவரை வடக்குக்கு நியமித்துள்ளது.
எனினும் மைத்திரிபாலவின் அரசாங்கம் பழைய விடயங்களை உரிய முறையில் கையாள வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் அறிக்கை வெளியிடல் தாமதம் குறுகிய காலத்தை கொண்டதாக இருக்க வேண்டும்.
போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும். இதன்மூலம் சுயாதீனமான விசாரணை ஒன்றுக்கு வழி செய்வதுடன், சாட்சிகள் பாதுகாக்கப்பட்டு குற்றவாளிகள் இறுதியில் தண்டிக்கப்பட வேண்டும் என்று நியூயோர்க் டைம்ஸ் கோரியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdho3.html


Geen opmerkingen:

Een reactie posten