[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 02:42.10 PM GMT ]
வடக்கு மாகாண சபையின் 24 வது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றது.
இன்றைய அமர்விற்கு வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலர் பத்திநாதன் வருகை தந்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 27ம் திகதி வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக பத்திநாதன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdix5.html
உயர்ந்த கல்விப் பாரம்பரியம் இந்த நிலத்துக்கு சொந்தமானது: சி.சிறீதரன்
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 02:33.04 PM GMT ]
இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சிறப்பு விருந்தினராக கரவெட்டி கோட்ட கல்வி அதிகாரி க.பொன்னையா ஆகியோரும் அயல்பாடசாலைகளின் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள் என பெருமளவானோர்கள் கலந்துகொண்டனர்.
மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்ற இந்த மெய்வல்லுனர் போட்டி நிகழ்வில் சிறார்கள் சுறுப்புடன் தங்கள் விளையாட்டுக்களில் ஈடுபட்டனர்.
நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில்,
கல்வி புலமைக்கு பெயர்பெற்ற மண்ணில் நாளைய சாதனையாளர்களின் மத்தியில் ஒரு பொழுது இருக்க கிடைத்தது மகிழ்ச்சி தருகின்றது.
இந்த ஊரின் மக்களும் அறநெறிப் பண்பாடுகளிலும் மொழி, கலாச்சார விழுமியங்களிலும் நல்லதொரு அத்திபாரத்தை பெற்றுள்ளதால் எத்தகைய இடர்கள் வந்தபோதும் இந்த மண்ணின் வாசனை மாறாமல் வாழக்கை நடத்துவதை நாம் அவதானிக்க முடியும்.
அமரர்களை நினைவு கொள்வதிலும் புலமைகளை போற்றுவதிலும் பின்பற்றுவதிலும் இந்த மண்ணுக்கு அதிக மதிப்புண்டு.
அந்த வழியில் இந்த சிறார்களும் வளர்த்தெடுகப்பப்படுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
மீனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க தேவையில்லை என்பதை போல இந்த மண்ணின் சிறார்களுக்கும் இயல்பாகவே சில குணங்கள் வழிவழியாய் கடத்தப்பட்டிருக்கும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdix4.html
Geen opmerkingen:
Een reactie posten