[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:27.37 PM GMT ]
மலையகத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக அபிவிருத்தி செய்த மூன்று கரப்பந்தாட்ட மைதானங்களை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று திறந்து வைத்தார்.
முன்னாள் அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்ட கொட்டகலை ஸ்டொனிகிளிப் பகுதியில் இரண்டு மைதானத்தையும், ஹற்றன் செனன் தோட்டத்தில் ஒரு மைதானத்தையும் இளைஞர்களின் பாவனைக்காக கையளித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdiq6.html
குமார் குணரட்னத்தை கைதுசெய்ய குடிவரவு திணைக்களம் பொலிஸாரின் உதவியை கோரியுள்ளது!
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:25.23 PM GMT ]
குமார் குணரட்னம் கடந்த ஜனவரி முதலாம் திகதியன்று 30 நாள் வீசாவில் இலங்கை வந்தார்.
எனினும் வீசா முடிவடைந்தநிலையில் அவர் நாட்டில் இருந்து வெளியேறவில்லை என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரஜையான குணரடனம் இரண்டு தடவைகளாக குடிவரவு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு உள்ளுர் அரசியல் ஈடுபாடு தொடர்பில் விசாரணை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவர் தற்போது எங்கிருக்கிறார் என்ற விடயம் வெளியாகவில்லை.
இதனையடுத்து அவரை கைதுசெய்ய பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளது.
இதேவேளை குமார் குணரட்னத்தை கைதுசெய்யும் நடவடிக்கை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று முன்னிலை சோசலிஷக் கட்சியின் பேச்சாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdiq5.html
கிழக்கு பல்கலை. ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி கண்டனப் பேரணி
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:14.08 PM GMT ]
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட முன்றலில் ஆரம்பமான இந்த கண்டனப் பேரணியானது மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகம் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்களினால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கடந்த காலத்தில் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அவை கருத்திற்கொள்ளப்படவில்லை எனவும் புதிய அரசாங்கம் இதற்கு தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் வலிறுத்தினர்.
'அரசே காமுகர்களிடமிருந்து பெண்களை காப்பாற்று', 'சக ஊழியர்களுடனும் மாணவர்களுடனும் கண்ணியமாக நடக்கத் தெரியாத காட்டுமிராண்டிகளை வீட்டுக்கு அனுப்பு', 'அரச பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களை சிறைக்கு அனுப்பு' போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்த கண்டனப் பேரணி தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கோவிந்தன் கிட்ணராஜாவிடம் வினவிய போது, 'எனக்கு எதிரான இந்த கண்டனப் பேரணி சிலர் தனிப்பட்ட இலாபங்களுக்காகவே நடத்தினர்.
பல்கலைக்கழகத்தில் எமக்கு எதிராக போராட முடியாதவர்கள் இவ்வாறு வீதியால் செல்பவர்களை வைத்து போராடுகின்றனர்.' 'இந்த கண்டன பேரணிக்கு பல்கலைக்கழக மாணவர்களை அழைத்த போது அவர்கள் வராத நிலையில், தனியார் கல்வி நிலையம் ஒன்றிலிருந்து மாணவர்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செய்துள்ளனர்.'
'அத்துடன் ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலி குற்றச்சாட்டுகளை மீண்டும் கொண்டுவர முயல்கின்றனர்.' 'கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் ஊழல் இடம்பெற்றுள்ளதாக கண்டறிவதற்கு அமைக்கப்படும் எந்த ஆணைக்குழுவினையும் முழுமனதுடன் வரவேற்க நான் தயாராகவே உள்ளேன்.' என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdiq4.html
கிழக்கு மாகாண சபையை யார் ஆட்சி செய்தாலும் அங்கு சமத்துவம் பேணப்படல் வேண்டும்: சிவநேசதுரை சந்திரகாந்தன்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:09.53 PM GMT ]
அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணம் என்பது தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் மாகாணமாகும். இதில் தமிழ் முதலமைச்சராக நான் முதல் தடவையிருந்தேன் அந்த அனுபவத்தை வைத்து பார்க்கும் போது இந்த மாகாணம் தமிழ் முஸ்லிம்கள் ஆட்சி செய்வதற்குரிய மாகாணமாகும்.
அந்த அடிப்படையில் தமிழரோ அல்லது முஸ்லிமோ ஆட்சி செய்ய முடியும். ஆனால் சமத்துவம் பேணப்படல் வேண்டும்.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களின் காலப்பகுதியிலே இந்த சமத்துவம் பேணப்படவில்லை. அபிவிருத்தி வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
அவ்வாறான விமர்சனங்களை பிரச்சினைகளை நிறுத்திக் கொண்டு சமத்துவமாக புதிய முதலமைச்சர் ஆட்சி செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மத்திய அரசில் வந்த கூட்டை சரியாக நடைமுறைப்படுத்தி கூட்டுப் பொறுப்பை அவர்கள் கூறுவது போல மாகாணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தியிருக்க முடியும். இது மாகாண சபையில் தோல்வியடைந்துள்ளது.
அவ்வாறான விமர்சனங்களை பிரச்சினைகளை நிறுத்திக் கொண்டு சமத்துவமாக புதிய முதலமைச்சர் ஆட்சி செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மத்திய அரசில் வந்த கூட்டை சரியாக நடைமுறைப்படுத்தி கூட்டுப் பொறுப்பை அவர்கள் கூறுவது போல மாகாணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தியிருக்க முடியும். இது மாகாண சபையில் தோல்வியடைந்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை ஆட்சிக்கு இன்று வந்துள்ள முறை என்பது சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதும் ஜனநாயக ரீதியானதுமாகும். நல்லாட்சி பற்றி பேசுகின்றவர்கள் இந்த முறையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஆட்சியை கிழக்கு மாகாண சபையில் உறுதிப்படுத்தியுள்ளார்கள் 20க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவாக கைச்சாத்திட்டதன் காரணமாக முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அகமட் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது ஜனநாயக நாட்டின் ஜனநாயக மரபுகளின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒரு விடயமாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் தற்போதுள்ள கிழக்கு மாகாண சபையை எல்லோரும் சேர்ந்து வலுவுள்ள ஒரு மாகாண சபையாக மாற்றும் போதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கலாம் அல்லது தமிழர்களை ஆளுகின்ற எந்த நிறுவனமாகவும் இருக்கலாம் நியாய பூர்வமாக இயங்குகின்ற ஒரு ஆளுமை மிக்க சபையாக மாற்ற வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்த கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரை மாற்றிக் கொண்டு தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது. இதில் பல கட்சிகளின் குழப்பம் ஊடகங்களில் வந்த அறிக்கைகள் மக்களை குழப்பியிருக்கின்றது.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஒரு தமிழராக வரவேண்டும் என்கின்ற பலமான கருத்து அரசியல் கட்சிகளினால் ஊடக வாயிலாக முன் வைக்கப்பட்டது.
எங்களைப் பொறுத்த வரைக்கும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் 12ம் திகதி மாகாண சபை கூடிய போது நாங்களே சொன்னோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து மாகாண சபையில் ஆட்சியமையுங்கள் நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். என்று கூறினோம் அந்தளவுக்கு அவர்கள் வெற்றிக் கழிப்பில் மாகாண சபைக்கு வந்திருந்தார்கள்.
ஆனால் இரண்டு பிரதான கட்சிகளும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலே இணைந்து செயலாற்றியிருந்தாலும் பின்னர் வந்த நாட்களில் அந்தக் கூட்டு மாகாணத்தில் ஏற்படுத்த முடியாமல் போனது.
குறிப்பாக மத்தியில் கூட்டும் மாகாணத்தில் ஒரு விரோதப்போக்கும் ஏற்பட்டுள்ளது. அது முக்கியமாக இரண்டு தலைவர்களிடையேயும் இணக்கப்பாடு இல்லாமல் போனதும் கவலையளிக்கும் விடயமாகும்.
இதை சமூகங்களுக்கிடையில் பற்றி எரியும் விடயமாக மாறியிருக்கின்றது. முறன்பாட்டை தோற்றுவித்து வசைபாடுகின்ற நிலைமைக்கு மாறியுள்ளது. இது நிறுத்தப்படல் வேண்டும். அது வன்முறையாக மாறக் கூடாது.
முஸ்லிம் காங்கிரசின் முடிவுகளில் விமர்சனங்கள் இருக்கின்றன. அவர்கள் மாகாணத்தில் கூட்டாட்சி ஒன்றை நடாத்தியிருக்கலாம். இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனுமானங்கள் பிழைத்துப் போய் விட்டன.
சுட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவுமுள்ள மாகாண சபை முறையை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் எனது ஆதரவையும் தற்போதுள்ள மாகாண சபை ஆட்சிக்கு வழங்கியுள்ளேன்.
மாகாண சபை முறைமை என்பது சிறுபான்மை சமூகங்களுக்காக உருவாக்கப்பட்டது. இதை அரசாங்கம் மாறியுள்ள நிலையில் சட்ட ரீதியான வலுவுள்ள மாகாண சபையாக மாற்றுவதற்கு எம்மாலானா அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் பொருளாளர் கே.தேவராஜ், கொள்கை பரப்புச் செயலாளர் அசாத் மௌலானா உட்பட அதன் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdiq3.html
Geen opmerkingen:
Een reactie posten