தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள்களை கட்டுப்படுத்த நடவடிக்கை



வலி. மேற்கு பிரதேச சபையின் புதிய நூலகம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:48.18 PM GMT ]
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் சங்கானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நூலக கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கானை அரசடி வைரவர் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள்  அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து பிரதம விருந்தினர் மாவை சேனாதிராசா, சரஸ்வதியின் உருவச்சிலையை திரை நீக்கம் செய்ததுடன். 5.2 மில்லியன் ரூபா சபை நிதியில் கட்டப்பட்ட கட்டடத்தை நாடாவெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக வடமாகானசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், அர்னோல்ட், விந்தன் கனகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdiq7.html

வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 04:22.58 PM GMT ]
வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் குறித்து இந்தியாவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பேச்சுவார்த்தை நடத்துவார் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களுக்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதன்போது இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் தொடர்வதாக கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
இந்திய இழுவை படகுகள் எல்லை தாண்டும் சிக்கல் நீண்டகால சிக்கலாகவே இருக்கின்றது. இதற்கு நாமும் பல நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றோம். ஆனால் அது தொடர்கின்றது என கடற்றொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.
இத்தகைய அத்துமீறல்களினால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் மட்டுமல்லாமல், இலங்கையிலுள்ள கடற்றொழிலாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு
எமக்குள்ளதன் அடிப்படையில் நாம் பல புதிய திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
இதற்கமைய எதிர்வரும் வாரம் இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் குறித்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். அதன் பின்னர் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை நாங்கள் காணுவோம் என அமைச்சர், கடற்றொழிலாளர்களுக்கு உறுதிமொழி வழங்கினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdirz.html


Geen opmerkingen:

Een reactie posten