தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கில் அனந்தி சசிதரன் மற்றும் இரா.அருள்



நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:05.22 PM GMT ]
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக்குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஏற்கனவே இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே இது தொடர்பில் இரண்டு கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்துவிட்டதாக ஹக்கீம் தெரிவித்தார்.
இந்தநிலையில் பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய ஒற்றுமை அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தமது கட்சி தயார் என்றும் ஹக்கீம் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdiq2.html


அரசாங்கம் கள்வர்களுடன் நிர்வாணமாக இருக்கிறது: ரஞ்சன் ராமநாயக்க
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 03:04.05 PM GMT ]
நடப்பு அரசாங்கமும் கள்வர்களுடன் நிர்வாணமாக இருப்பதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது சர்ச்சைக்குரிய இந்த கருத்தை வெளியிட்டார்.
நடப்பு அரசாங்கத்துக்குள்ளும் ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.
இதேவேளை தமது ஆட்சியின் போது ஊழல்களை செய்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


சென்னையில் நடைபெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கில் அனந்தி சசிதரன் மற்றும் இரா.அருள்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 02:44.24 PM GMT ]
சென்னையில் இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் என்ற தலைமைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பசுமைத்தாயகம் இரா.அருள் அவர்கள் மார்ச் 2015 ஐநா. மனித உரிமை ஆணைய விசாரணை என்ற தலைப்பில் உரையாற்றினர்.
கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாகவும், இன அழிப்பு தொடர்பாகவும் பேசினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdiq0.html


Geen opmerkingen:

Een reactie posten