தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

வடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரணை கடுமையானது: அமைச்சர் ராஜிதசேனரத்தின !

வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை கடுமையான நிலைப்பாடு என வர்ணித்துள்ள அமைச்சர் ராஜிதசேனரத்தின மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற் கொள்வதற்கு சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்தும் என உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது நல்லிணக்கத்திற்கான காலம், இருதரப்பும் தீவிர நிலைப்பாடுகளை கைவிட்டுவிட்டு ஆக்கபூர்வமாக செயற்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக தனது கவலைகளை வடமாகணசபை வெளியிடுவதை நியாயப்படுத்தலாம், ஆனால் அவர்கள் அதனை இன அழிப்பு என குறிப்பிட முடியாது,மோதல் போக்கை கடைப்ப்பிடிப்பது இந்த விடயத்தில் முன்னோக்கி நகர்வதை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2258.html

Geen opmerkingen:

Een reactie posten