தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே: வட மாகாணசபை தீர்மானத்தினை வரவேற்று நா.தமிழீழ அரசாங்க அரசவை தீர்மானம்!

பிள்ளைகளின் கல்விக்காக இணைந்து எல்லோரும் பாடுபடுவோம் இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதர் தட்சணாமூர்த்தி
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 08:33.31 PM GMT ]
கிளிநொச்சி பாரதிபுரம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் பெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக இலங்கைக்கான இந்திய துணைத்தூதரக தூதர் தட்சணாமூர்த்தி மற்றும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி சிவமதி சிவச்சந்திரன் யு.என்.நிறுவன உயர் அதிகாரி பத்மானந்தன் ஓய்வு நிலை அதிபர் திரவியம் முன்னாள் அதிபர் கனகரட்ணம் முன்னாள் அதிபர் ராஜேந்திரம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் அயல்பாடசாலை அதிபர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இந்திய துணைத்தூதர் தட்சணாமூர்த்தி உரையாற்றுகையில்
கிளிநொச்சியில் இந்த பிரதேசத்தின் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த பிள்ளைகளின் கல்விக்காக பாடுபடும் இந்தப்பாடசாலையின் அதிபரை நான் பாராட்டுகின்றேன்.இந்த பிரதேசத்து மாணவர்கள் கல்வியில் உயர்ந்து பல்வேறு ஆளுமைகளை கொண்ட மாணவர்களாக வளர்த்தெடுக்கப்டவேண்டுமென நான் விரும்புகின்றேன்.இதற்காக நமது ஆதரவு என்றைக்கும் இருக்கும் என தெரிவிக்க விரும்புகின்றேன்.
எமக்கு தமிழ் மாணவர்களில் கல்வியில் மிகுந்த கரிசனையுண்டு அதற்காக நாம் எல்லோரும் இணைந்துபாடுபடுவோம் என தெரிவித்தார்.


நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது!– ரதன தேரர்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 04:16.49 PM GMT ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சியும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சியும் அரசாங்கம் அமைக்கும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ளாது.
எனவே பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.
நாட்டின் அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியும்ää ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டுமென அதுரலிய ரதன தேரர் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhvy.html

தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே: வட மாகாணசபை தீர்மானத்தினை வரவேற்று நா.தமிழீழ அரசாங்க அரசவை தீர்மானம்!
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 10:55.03 PM GMT ]
இலங்கைதீவில் தமிழினத்தின் மீது சிங்கள அரசுகளினால் நடத்தப்பட்டது ஓர் இனஅழிப்பே என்பதனை வலியுறுத்திய வட மாகாணசபைத் தீர்மானத்தினை வரவேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதி கோரி, அனைத்துலக விசாரணை நோக்கிய செயற்பாட்டில், தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை, வட மாகாணசபைத் தீர்மானம் எடுத்துக்காட்டி நிற்பமாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் முழுமையான விபரம்:
வட மாகாணசபையின் மதிப்புக்குரிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களின் முன்மொழிவில், 10-02-2014 அன்று தமிழர் மீது நிகழ்த்தப்பட்டது இனஅழிப்பே என்பதை வலியுறுத்தி, உரிய நேரத்தில் தீர்மானமொன்றை வட மாகாணசபை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறது.
இத்தகையதொரு உறுதியான தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தீர்மானத்தினை சபையில் முன்மொழிந்த மதிப்புக்குரிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கும், சபை பிரதிநிதிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பெருமகிழ்வையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிவில்,
"தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் தமிழ் பேசும் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நீதி தேடுவோருக்கு இந்தத் தீர்மானம் உறுதியாக இருக்கும்"
"வரலாற்று ரீதியாக இன அழிப்பை எதிர்கொண்டு வந்த நாங்கள் எமது மக்களின் இதுவரையான உள்ளக் குமுறல்களை உலக அரங்கிலே கொட்டித் தீர்த்து நீதியைச் சர்வதேச விசாரணை மூலம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்"
என அமைந்துள்ள இவ்வாக்கியங்கள், தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதி கோரி அனைத்துலக விசாரணை நோக்கிய செயற்பாட்டில் தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டி நிற்கின்றது.
"இரண்டாம் உலகப் போரில் இன அழிப்பைச் செய்தவர்கள் தற்போதும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவது எந்தக் காலகட்டத்திலும் நீதி மறுக்கப்படக்கூடாது என்ற உலக மக்களின் சிந்தனைச் சிறப்பின் எதிரொலியே" எனும் முன்மொழிவின் வாக்கியங்கள் எமக்கான நீதிக்கு அனைத்துலக மக்களின் மனச்சாட்சியினை நிச்சயம் தட்டியெழுப்பும்.
வட மாகாணசபை முதலமைச்சர் அவர்களினால் முன்மொழியப்பட்ட தீர்மான வாக்கியங்கள் ,ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கான வேண்டுதலையும் தமிழனப் படுகொலைக்கான அனைத்துலக விசாரணையின் அவசியம் குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த ஆவணமாகவும் அமைகிறது.
இது மதிப்புக்குரிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது. இத்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதலமைச்சர் மற்றும் சபையோரினை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம்.
கடந்த காலத்தில் ஈழத்தமிழர் விவகாரத்தினை மையப்படுத்தி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முன்மொழிவில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தினையும் இவ்வேளையில் நாம் நினைவுறுத்திக் கொள்கின்றோம்.
இந்நிலையில் நீதிக்கான குரலாக வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் ,அனைத்துலக சமூகத்தின் செவிப்பறைகளை உரக்கத்தட்டும் என நாம் நம்புகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhvz.html

Geen opmerkingen:

Een reactie posten