தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

நீலப்படையணியின் 150,000 ரீசேர்ட்டுக்கள் மீட்பு

மதவாச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலி! 13 பேர் காயம்
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 04:19.13 PM GMT ]
மதவாச்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மதவாச்சி எஹலகஹா வங்குவ என்னும் இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பார ஊர்தியொன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்ததில் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


நீலப்படையணியின் 150,000 ரீசேர்ட்டுக்கள் மீட்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 04:28.31 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தலைமையிலான நீலப்படையணியின் ரீசேர்ட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
தேசிய இளைஞர் சேவை சபையின் இலச்சினையுடன் நீலப் படையணியின் பெயரும் இந்த ரீசேர்ட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
சுமார் 150, 000 டீசர்ட்டுக்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தாரது படங்கள் பொறிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான பெருந்தொகை நாட்காட்டிகளும் மீட்கப்பட்டுள்ளன.
தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைமைக் காரியாலய களஞ்சியசாலையில் இன்று இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இளைஞர் விவகார அமைச்சர் நிரோசன் பெரேரா மற்றும் இளைஞர் சேவை சபையின் தலைவர் எரந்தக வெலியங்ககே உள்ளிட்ட அதிகாரிகள் களஞ்சியசாலையை சோதனையிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdir0.html

Geen opmerkingen:

Een reactie posten