முன்னைய அரசின் அபிவிருத்திகள் நிறுத்தம்! சபையில் விவாதம்! பணம் ஒதுக்காமல் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களே ரத்து!
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 12:04.45 AM GMT ]
கடந்த அரசாங்கம் ஆரம்பித்த அநேக அபிவிருத்தித்
திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் மாவட்ட
செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர்
நிமல் சிறிபால டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறிதது ஒருநாள் விவாதம் நடத்த வேண்டுமென அவர் பாராளுமன்றத்தில் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பணம் ஒதுக்கப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட முன்னைய அரசின் திட்டங்கள் ரத்து
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் பணம் ஒதுக்காமல் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது. சுயதொழில் புரிபவர்களுக்கு வழங்குவதற்காக தேர்தல் காலத்தில் பணம் செலுத்தாமல் தருவித்த பொருட்களுக்கான பணத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அறவிட இருப்பதாக உள்விவகார மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி. சில்வா மற்றும் சாந்த பண்டார ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், பணம் ஒதுக்காமல் தேர்தல் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டு பணம் ஒதுக்கி ஆரம்பித்த திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். நிதி ஒதுக்காமல் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் வழங்க முடியாது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இடைநடுவில் நிறுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.
சுயதொழில் புரிவோர் மற்றும் பெண்களுக்கு விநியோகிப்பதற்காக தருவிக்கப்பட்ட பெருமளவு பொருட்கள் விநியோகிக்கப்படாமல் குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் சாந்த பண்டார எம்.பி கோரினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர்,
பணம் செலுத்தாமல் பெருமளவு பொருட்கள் தருவிக்கப்பட்டுள்ளன. ஒரு பகுதி பொருட்கள் தேர்தல் காலத்தில் பகிரப்பட்டன. தகுதியானவர்களை தெரிவுசெய்து இவற்றை வழங்குவோம். பணம் செலுத்தாமல் தருவித்த பொருட்களுக்கான பணத்தை உரிய அதிகாரிகளிடமிருந்து பெறவுள்ளோம் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnryH.html
அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் முல்லைத்தீவில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கள ஊடகம் குற்றச்சாட்டு!
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 12:29.40 AM GMT ]
அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டு உயர் அதிகாரிகள்
அண்மையில் இவ்வாறு முல்லைத்தீவிற்கு விஜயம் செய்து இரகசிய பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளனர்.
வட மாகாணசபையின் உறுப்பினர் ரீ.ரவிகரனின் இல்லத்தில் இந்த ரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரிகளான ஜோசப் ஸ்கூகலர் மற்றும் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் அப்லேன் ஜேன் ஆகியோரே இவ்வாறு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அண்மையில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனவழிப்பு தீர்மானம் தொடர்பிலும் இந்த இரகசிய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnrzB.html

Geen opmerkingen:
Een reactie posten