[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 03:56.50 AM GMT ]
காலை 9.30 மணிக்கு சிரேஸ்ட சட்டதரணியும் இலங்கை
தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் தலைவருமான கே.வி.தவராசா தலைமையில்
இந்த நிகழ்வு இடம்பெறும்.
இதில் விருந்தினர்களாக பா.உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை. சேனாதிராசா, மேல் மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராசசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்வில் வெளியீட்டுரையை மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஆற்றவுள்ளார்.
ஆய்வுரைகளையும் உரைகளையும் ஆய்வாளர் நிலாந்தன், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன், பா.உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கிளிநொச்சி அறிவகம் அழைப்பு விடுத்துள்ளது.

http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnrzJ.html
விமல் பிரதமராக முயற்சித்தால் எங்களுடைய நிலை என்ன?: சுசில் கேள்வி
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 04:11.48 AM GMT ]
கடந்த நாட்களில் நுகேகொடையில் இடம் பெற்ற
பேரணியில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும்
பிரதிநிதிகளை அழைத்து நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுக் கொடுக்காமல் பேசியதற்கான காரணம் பிரதமர் பதவியை தான் கைப்பற்றும் முயற்சியிலேயே.
அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்வளவு காலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாங்கிய எங்களின் நிலை என்ன என்று யோசிக்க வேண்டும் என சுசில் பிரேம ஜயந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியே தொடர்ந்து நடந்தால் எதிர்வரும் பொது தேர்தலில் தினேஷ், கம்மன்பில என வேட்பாளர் பட்டியல் பெரிதாகிக் கொண்டே செல்லும் என தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள், அவ்வாறான பிரச்சினை ஒன்று ஏற்படாமல் தடுப்பதற்கு மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராக போட்டியிட வைக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச போட்டியிடவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களுக்காக வாக்குகள் கேட்டு பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் சுசில் பிரேம ஜயந்த உட்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுவினர்கள் கட்சியின் தலைமைத்துவத்திற்கு யாரை நியமிப்பது என்று கலந்துரையாடல் மேற்கொண்டு உடனடியாக பதில் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவிலிருந்து
அண்மையில் நாடுகடத்தப்பட்ட நால்வரும் ஆட்கடத்தல்காரர்களின் பட்டியலில்
காணப்பட்டவர்கள் என அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன்
தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுக் கொடுக்காமல் பேசியதற்கான காரணம் பிரதமர் பதவியை தான் கைப்பற்றும் முயற்சியிலேயே.
அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்வளவு காலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தாங்கிய எங்களின் நிலை என்ன என்று யோசிக்க வேண்டும் என சுசில் பிரேம ஜயந்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியே தொடர்ந்து நடந்தால் எதிர்வரும் பொது தேர்தலில் தினேஷ், கம்மன்பில என வேட்பாளர் பட்டியல் பெரிதாகிக் கொண்டே செல்லும் என தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள், அவ்வாறான பிரச்சினை ஒன்று ஏற்படாமல் தடுப்பதற்கு மகிந்த ராஜபக்ச பிரதம வேட்பாளராக போட்டியிட வைக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச போட்டியிடவில்லை என்றால் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களுக்காக வாக்குகள் கேட்டு பிரதேசங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் சுசில் பிரேம ஜயந்த உட்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுவினர்கள் கட்சியின் தலைமைத்துவத்திற்கு யாரை நியமிப்பது என்று கலந்துரையாடல் மேற்கொண்டு உடனடியாக பதில் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.
நாடுகடத்தப்பட்டவர்கள் நால்வரும் முறையான புகலிடகோரிக்கையாளர்கள் அல்லர்: அவுஸ்திரேலியா
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 05:20.13 AM GMT ]
சீனாவின் செய்தி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற புகலிட கோரிக்கையாளர்கள் நால்வர் நாடுகடத்தப்பட்டனர்.
கொக்கோஸ் தீவுகளின் வட மேற்கு கடற்பிராந்தியத்தில் படகில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த நபர்கள் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பினரால் கடந்த மாதம் 9ம் திகதி கைது செய்யப்பட்டு அடுத்த நாளே இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் நால்வரும் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட முன்னர் அவர்கள் மீள தாயகத்திற்குத் திரும்பும் பட்சத்தில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செயற்பாட்டின் மூலம் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வலுவான செய்தி வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களை ஆபத்தான படகுப் பயணங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் பாரியளவில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன, இதை அறியாத அப்பாவி மக்கள் தமது பணம், நேரத்தை விரயம் செய்கின்றனர்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான விடயத்தில் அவுஸ்திரேலிய அரசு சர்வதேச மட்டத்திலான மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்புபட்ட அனைத்து சட்டங்களையும் முறையான பின்பற்றிவருவதாகவும் அவுஸ்திரேலிய அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு 15 படகுகள் மூலம் 400க்கும் மேற்பட்ட சட்டவிரோதப் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கையாளும் கொள்கை தொடர்பாக ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த அமைப்புகள் என்பன அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr0E.html

Geen opmerkingen:
Een reactie posten