[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 08:08.08 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையின் நீதித்துறை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுவந்தது.
இந்த சூழ்நிலையிலேயே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் நாட்டின் 44வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவனை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த நீதியரசர் என்ற ரீதியில் கே. ஸ்ரீபவனுக்கு தலைமை நீதியரசர் பதவி கிடைத்திருப்பதை வரவேற்பதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் பிபிசியிடம் கூறினார்.
இலங்கை சட்டக்கல்லூரியில் கே. ஸ்ரீபவன் தனது மாணவராக கல்வி கற்றவர் என்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.
எனினும், நீண்டகால பிரச்சனைகளை ஒரேநாளில் தனியொரு நபரினால் தீர்த்துவிட முடியாது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் 44வது தலைமை நீதியரசர் கே. ஸ்ரீபவன்
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நீதித்துறைக்கு முறைப்படி வந்தவர் ஸ்ரீபவன் என்றும் கூறிய விக்னேஸ்வரன், 'ஆனால் மற்றவர்களும் அவ்வாறே கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் முன்னேற வேண்டியவர்களை தடுத்து மேலே கொண்டுவரப்பட்டவர்கள்' என்றார் விக்னேஸ்வரன்.
சில நீதியரசர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஆக்கப்பட்டு, சிறிதுகாலத்தில் உச்சநீதிமன்றத்துக்குள் புகுத்தப்பட்டவர்கள் என்றும் முன்னாள் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
எனினும், ஸ்ரீபவன் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இருந்து, தனக்கு உரிய காலம் வந்தபோதே உச்சநீதிமன்ற நீதிபதியாக முறைப்படி நியமனம் பெற்றுவந்தவர் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகா பதவிநீக்கம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார்.
எனினும் புதிய அரசாங்கம், ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்து, சில தினங்களுக்கு முன்னர் அவரை மீண்டும் பணியில் அமர்த்தியது.
ஆனால், அவர் பணியிலிருந்து சொந்த விருப்பத்தின் பேரில் ஓய்வுபெற்றதை அடுத்து, கே. ஸ்ரீபவன் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKces3.html
அரசியல் பழிவாங்கலுக்குரிய சாதனமாக ஊடகம் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படும்: ஊடகத்துறை அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 01:31.16 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் முடிவடையும் வரை ஜனாதிபதிக்கு சேறுபூசும் வகையில் பிரசுரிக்கப்பட்ட செய்திகள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பில் நாம் கூடுதல் அவதானம் செலுத்தவுள்ளோம்.
அந்தவகையில் ஜனாதிபதிக்கு சேறுபூசும் வகையிலான செய்திகளும் விளம்பரங்களும் யாரால் எழுதப்பட்டது. அதற்கான பணிப்புரை விடுத்தவர்கள் யார்? அதன் பின்புலம் என்னவென்பது தொடர்பிலான அனைத்து தகவல்களும் அடங்கிய விரிவான அறிக்கை எதிர்வரும் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதையடுத்து லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க சேவையாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடக சுதந்திரத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கு. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் பேனை பிடித்து உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்கக்கூடிய நிலை இப்போது எமது நாட்டில் உருவாகியுள்ளது எனவும் அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKces4.html
Geen opmerkingen:
Een reactie posten