தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

வட,கிழக்குப் பகுதியின் நிலவரங்களை ஆராயும் பாதுகாப்பு ராஜங்க அமைச்சர்

தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் போது பிரதம நீதியரசரோ நானோ அலரி மாளிகையில் இருக்கக்கூடாது!– தேர்தல்கள் ஆணையாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 03:25.07 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், தேர்தல்கள் ஆணையாளராகிய நானோ அல்லது பிரதம நீதியரசரோ அலரி மாளிகையில் இருக்கக் கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த அலரி மாளிகைக்கு நானும் பிரதம நீதியரசரும் செல்லக் கூடாது.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது, அரசாங்க அதிகாரிகளான தாமும் பிரதம நீதியரசரும் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரின் வீட்டில் இருப்பது, தொழில் ஒழுக்க விதிகளுக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினமன்று இரவு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அலரி மாளிகையில் தங்கியிருந்தமை குறித்து, சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே தேர்தல்கள் ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet0.html
வட,கிழக்குப் பகுதியின் நிலவரங்களை ஆராயும் பாதுகாப்பு ராஜங்க அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 03:53.21 AM GMT ]
வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய அந்தப் பகுதிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன விஜயம் செய்யவுள்ளார்.
வடக்கு, கிழக்கின் கள நிலைமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யும், புதிய அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் இந்தப் பயணம் அமையவுள்ளது.
எதிர்வரும் 6ம் பலாலிப் படைத்தளத்துக்குச் சென்று, யாழ்.படைகளின் தலைமையகத்தில், பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக படை அதிகாரிகளின் கருத்துக்களை அவர் அறிந்து கொள்வார்.
அடுத்தநாள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா படைத் தலைமையகங்களில், இராணுவ அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிவார்.
எட்டாம் திகதி திருகோணமலைக்குச் செல்லும் அமைச்சர், கிழக்குப் படைத் தலைமையகத்திலும் இதுபோன்ற சந்திப்புக்களில் ஈடுபடுவார்.
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுக்கு வடக்கு,கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிப்பதில், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஆர்வத்துடன் இருப்பதாக, இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதாக புதிய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet1.html

Geen opmerkingen:

Een reactie posten