[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 01:43.00 AM GMT ]
இதனையடுத்து அந்த அமைப்புக்கள் கருத்தரங்குகள் உட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், பிரதமரின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய போது இதற்கான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், அரசசார்பற்ற அமைப்புக்கள். இலங்கையின் நீதியமைப்புக்குள் தமது பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKces5.html
கொழும்பு பல்கலைக்கழக வீட்டை கையகப்படுத்தியதாக எஸ்.பி.திஸாநாயக்கவின் மீது குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 01:57.16 AM GMT ]
இந்த வீடு, ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது. இதன் கடைசி உரிமையாளராக கலாநிதி சிவா சின்னத்தம்பி என்பவர் இருந்துள்ளார்.
இவரே, குறித்த வீட்டை கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
2000ம் ஆண்டு சிவா சின்னத்தம்பியின் மறைவை அடுத்தே முன்னாள் உயர்கல்வி அமைச்சர் குறித்த வீட்டை போலி ஆவணங்களை சமர்ப்பித்து கையகப்படுத்திக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த கொழும்பு மாவட்ட நீதிவான் கிஹான் பிலபிட்டிய. குறித்த வீட்டின் தற்போதைய உரிமையை கண்டயறியுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் எஸ்.பி.திஸாநாயக்க கருத்து எதனையும் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKces6.html
Geen opmerkingen:
Een reactie posten