ஒரே இரவில் நான்கு வீடுகளில் மர்ம கும்பல் கைவரிசை
தொடர்ந்து கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்மகும்பல் வீட்டில் இருந்த பணம் மற்றும் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் நகைகளையும் திருடி உள்ளது. இது பற்றி தகவல் அறிவிக்கபட்டதுடன், கடுபொத டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கைரேகை நிபுணர் கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளனர். ஒரே நாளில் 4–க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



http://www.jvpnews.com/srilanka/97493.html
பக்ரைன் நாட்டில் இருந்து காதலனை தேடி தியாகதுருகம் வந்த இலங்கை பெண்
இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெங்கடேசன் சொந்த ஊரான வி.பாளையத்துக்கு திரும்பினார். இந்த நிலையில் காதலனை பார்க்க முடியாமல் தவித்த தவராஜா ரேணுகா கணவரிடம் இலங்கைக்கு சென்று பெற்றோரை பார்க்க செல்வதாக கூறி பக்ரைன் நாட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் மனைவி மீது சந்தேகம் அடைந்த ராஜபிலேந்திரன் இலங்கையில் உள்ள தனது மாமியார் வீட்டில் போனில் பேசி விசாரித்தார். அப்போது தவராஜா ரேணுகா இலங்கைக்கு செல்ல வில்லை என்பது தெரியவந்தது.
தவராஜா ரேணுகாவின் செல்போனில் தொடர்பு கொண்டபோது தவராஜா ரேணுகா கணவருடன் பேச மறுத்து இணைப்பை துண்டித்தார். ஆனால் செல்போன் டவர் தியாகதுருகத்தை காட்டியது. இதனால் தவராஜா ரேணுகா தியாகதுருகத்தில் காதலன் வெங்கடேசன் வீட்டில் தங்கி இருப்பது உறுதியானது.
இதையடுத்து ராஜபிலேந்திரன் சென்னை வந்து தனது மனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு கோர்ட்டில் மனு செய்தார். நீதிபதி மனு மீது விசாரணை நடத்தி தவராஜா ரேணுகாவை கண்டுபிடித்து அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறு தியாகதுருகம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
தியாகதுருகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தவராஜா ரேணுகா வி.பாளையத்தில் உள்ள வெங்கடேசன் வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தியாகதுருகம் போலீசார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் உதவியுடன் வி.பாளையத்தில் வெங்கடேசன் வீட்டில் தங்கி இருந்த தவராஜா ரேணுகாவை மீட்டனர். பின்னர் கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அதன் பின்னர் தவராஜா ரேணுகாவை அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
http://www.jvpnews.com/srilanka/97500.html
Geen opmerkingen:
Een reactie posten