நான் வர மாட்டேன்! திஸ்ஸவின் மகள் துல்மினி
நான் அரசியலுக்கு வரமாட்டேன் என திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க தெரிவித்துள்ளார். முகப்புத்தக வளைத்தளங்களில் தனக்கு கிடைக்கப்பட்டுள்ள புகழ் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். நான் அரசியலுக்கு வர தீர்மானிக்கவில்லை. அப்படியான ஒரு அவசியமும் எனக்கு இல்லை. ஆனாலும் நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதற்காக நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.
சமூக அமைப்பொன்றை அமைத்துக்கொண்டு சேவை செய்யவும் முடியும். என்னிடம் எல்லோரும் கேட்கிறார்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை எனது அப்பாவுக்கும் அதில் உடன்பாடு இல்லை என துல்மினி அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நான் வர மாட்டேன்! திஸ்ஸவின் மகள் துல்மினி
ஜனாதிபதி மைத்திரி மனைவி தமிழ்ப் பெண்! வெளியானது உண்மைகள்…
இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார். இவரின் பெயர் ஜெயந்தி. மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார். தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.
இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால் மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காண முடிகின்றது. மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இவருடைய காதல் திருமணத்துக்கு ஊக்கிகளாக அமைந்தன.

http://www.jvpnews.com/srilanka/97522.html
Geen opmerkingen:
Een reactie posten