தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

அரிசி, சீனி, கோதுமை மாவு உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு

மகிந்தவின் பாரிய கொள்ளை சிக்கியது! சாட்சியுடன் வெளிப்படுத்துவேன்: நிதி அமைச்சர்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 04:24.17 AM GMT ]
கடந்த அரசாங்க ஆட்சியில் இடம் பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சாட்சியுடன் மேலும் பல தகவல்களை வெளிபடுத்த ஆயத்தமாகவுள்ளதாக நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான தகவல் பல தன்னிடம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்த மகிந்த, மொத்தம் 250 மில்லியன்: பட்டலி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 57 லட்ச வாக்குகளை பெற்றுள்ளார்.
அவர் ஒரு வாக்கிற்காக 43000 ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும் என கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பணம் மூலம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என புது டில்லி நிரூபித்து காட்டுகிறது அதற்கான மாதிரியை வெளிப்படுதியவர்கள் இலங்கையை விட்டு செல்வார்களா என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலுக்காக 250 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdhxy.html

அரிசி, சீனி, கோதுமை மாவு உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 09:42.56 AM GMT ]
சதொச ஊடாக அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர் நன்மை கருதி, நாளை முதல் அமுலுக்கு வரும் விதத்தில் 10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
வர்த்தக அமைச்சு இதற்கான உத்தரவை விடுத்துள்ளது.
அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் (கிலோ அடிப்படையில்)  குறைக்கப்படவுள்ளன.
சீனி –                                        83 ரூபா
கோதுமை மா –                 87 ரூபா
நெத்தலி –                           384 ரூபா
மாசி –                                   1740 ரூபா
உலர் மிளகாய் –               245 ரூபா
பயறு –                                     260 ரூபா
மீன் ரின் (425 கிராம்) –   132.50 ரூபா
மீன் ரின் (155கிராம்) –      64.50 ரூபா
வெள்ளை பச்சரிசி –        50 ரூபா
நாட்டரிசி –                            55 ரூபா
பொன்னி சம்பா –             60 ரூபா
இவ்வாறான விலைப்பட்டியலை வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgp0.html

Geen opmerkingen:

Een reactie posten