[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 08:07.57 AM GMT ]
கோத்தபாய ராஜபக்ச, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்குடன் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை சட்டவிரோதமானது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் கூறியமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.
அமெரிக்கா தூதுவருடன் கோத்தபாய செய்து கொண்ட உடன்படிக்கை திருட்டு உடன்படிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருட்டு உடன்படிக்கை என்பதால், கோத்தபாயவுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த வேண்டும் எனவும் நாணயக்கார கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 08:28.17 AM GMT ]
அதன் அரசியல்குழு உறுப்பினர் மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கும், வழிநடத்தலுக்கும் இசைந்து கொடுக்கின்ற அரசாங்கம் ஒன்றே தற்போது பதவி ஏற்றுள்ளது. இதற்கு ஜே வி பி ஒத்துழைத்து செயற்படுகிறது.
மக்கள் விடுதலை முன்னணியினர் தமது கொள்கைகளுக்காக செயற்படுவதை போல ஒரு வேடத்திலும், இரவில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளித்து மற்றுமொரு வேடத்தையும் வெளிப்படுத்தி வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுக்கு விருந்து வைக்கும் ரணில்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 08:33.22 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள், அதிகாரிகளுக்கு விசேட விருந்து வழங்கப்படவுள்ளது.
விசேட விருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வைபவம் இன்று மாலை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விருந்திற்காக தொகுதி அமைப்பாளர்கள் 160 பேர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட மேலும் 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விருந்திற்கான அனைத்து செலவுகளும் பிரதமரின் தனிபட்ட செலவென தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgo4.html
பொதுத் தேர்தலில் ஐ.தே.க இலகு வெற்றியீட்டும் - மக்களின் வருமானத்தை அதிகரிப்பதே எமது இலக்கு: கபீர் ஹாசிம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 09:00.27 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் கபீர் ஹாசிம் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பொது மக்களை அவதானிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐ.தே.க இலகு வெற்றியீட்டும்: கபீர் ஹாசீம்
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இலகு வெற்றியீட்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவாலாக அமையாது. கிராம மட்டத்தில் பலம் வாய்ந்த பொறிமுறைமை ஒன்று காணப்படுகின்றது.
கூடுதலான வாக்கு பலமுடைய தனி அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும். கடந்த ஜனாதிபதி இந்த விடயங்கள் நிரூபிக்கப்பட்டது.
ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவது சவாலாக அமையாது என கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவிடம் இன்று மூன்றாவது நாளாகவும் விசாரணை
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 09:00.35 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள சர்வதேச ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரியான வெலே சுதா மற்றும் மேலும் 75 பேரிடம் பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பிலேயே இன்று மூன்றாவது நாளாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
துமிந்த சில்வா இன்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
நேற்றும் நேற்று முன்தினமும் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவை மின்சார நாற்காலியில் அமர செய்வது தற்கொலை முயற்சியாகும்: ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 09:03.05 AM GMT ]
மஹிந்தவை மின்சார நாற்காலியில் இருத்தி தண்டிக்க எவரேனும் முயற்சித்தால் அது தற்கொலை முயற்சியாகும். அவ்வாறான முயற்சிக்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.
மஹிந்த ராஜபக்ச மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டிக்கவோ அல்லது அவருக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தவோ இமளிக்கப்பட மாட்டாது என ரத்ன தேரர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக தொடர்ந்தும் ஷெணிக்கா ஹிரிம்புரேகம
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 09:26.34 AM GMT ]
குறித்த பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம் உள்ளதால் புதிதாக ஒருவர் நியமிக்கும் வரை ஹிரிம்புரேகம தலைவராக செயற்படுவார் என உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹிரிம்புரேகமவை பதவி விலகுமாறு கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டம் செய்ததுடன் இன்றும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எனினும் ஹிரிம்புரேகம கடந்த 9ம் திகதி இராஜினாமா செய்ததோடு ஆணைக்குழு உறுப்பினர்கள் 7 பேரும் பதவி விலகினர்.
இன்று ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டு. இடம்பெயர் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சருக்கு கடிதம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 09:41.39 AM GMT ]
இதனை கருத்திற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு புதிய மீள்குடியேற்ற அமைச்சருக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கடிதம் ஒன்றினை நேற்று புதன்கிழமை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து 1986,1987,1989,1990,2007ம் ஆண்டுகளில் நடந்த யுத்தம் காரணமாக பலர் இடம்பெயர்ந்தனர்.
இவர்களில் குறிப்பிட்ட இடங்களைச் சேர்ந்த பலர் மீளக்குடியமர்த்தப்பட்டனர். இம் மக்களில் கணிசமானோர் கடந்த அரசாங்கக் காலத்தில் மீளக்குடியமர்வு செய்யப்பட்ட போது மீளக்குடியமர விருப்பம் தெரிவிக்கக்கூடிய சூழல் இருக்கவில்லை.
பல குடும்பங்கள் விருப்பத்துடன் மீளக்குடியமர்த்தப்பட்டனர். மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களில் இவர்களுக்கான அடிப்படை தேவைகளான நிரந்தர வீட்டு வசதி, குடிநீர், போக்குவரத்து, தொழில்வாய்ப்பு, உணவு, கல்வி, வீதி அமைப்பு, சுகாதாரம் ஏனைய வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வந்த பலர் அப்பகுதியிலேயே தங்களுக்கான போக்குவரத்து, தொழில், சுகாதாரம், கல்வி வசதிகள் போன்ற விடயங்கள் பூர்த்தி செய்யக் கூடிய வண்ணம் இருந்ததன் காரணமாக சொந்த இடங்களில் மீளக்குடியமர செல்லும் போது வாய்ப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படாததன். காரணமாக மீளக்குடியமர்ந்த பலர் மீண்டும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் திரும்பி விட்டனர். எனினும்,
- ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் 4ம் குறிச்சியில் 1990ம் ஆண்டு யுத்தத்தின் போது பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தனர்.இவர்களின் வீடுகள் உடைக்கப்பட்டன. இவர்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட போதும் இவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இவர்களுக்கு காணி உறுதிகளும், வாக்காளர் இடாப்புகளும் உண்டு.பெரியபுல்லுமலை மாந்தோட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் ஐந்து குடும்பத்திற்கு மாத்திரம் வீட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. மிகுதியானோருக்கும் வழங்கப்பட வேண்டும். மேலும் கித்துள், வெலிக்காகண்டி, கோப்பாவெளி, சர்வோதயநகர் ஆகிய கிராமத்தவர்களும் 2002ம் ஆண்டு இடம் பெயர்ந்து சுமார் 11 மாதங்களுக்குப் பின்னர் குடியமர்ந்தவர்கள் இவர்களுக்கும் முழுமையான வீட்டு வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.
- மண்முனை வடக்கு ( மட்டக்களப்பு) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வலையறவு கிராமத்தில் 1987ல் இராணுவ முகாம் அமைக்கப்பட்டதால் இடம் பெயர்ந்து 2009ல் இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின் வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படாத சுமார் 20 குடும்பங்கள் சொந்த இடத்தில் உறவினர் நண்பர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கும் காணி உறுதிகள், வாக்காளர் இடாப்பு என்பன உண்டு.
- மண்முனை மேற்கு ( வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவில் உன்னிச்சை 8ம் கட்டையில் 1990ம் ஆண்டில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் இடம் பெயர்ந்தனர். இவ்விடத்தில் இருந்த வீடுகள் உடைக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இப்போது இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின்னர் சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கும் காணி உறுதிகளும் வாக்காளர் இடாப்புக்களும் உண்டு. இப்பிரதேச செயலாளர் பிரிவில் 1985ம் ஆண்டிற்கு முன் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது சிப்பிமடு கிராமத்தில் வாழ்ந்த சிங்களவர்கள், பாவற்கொடிச்சேனைக் கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தனர். இவர்களில் ஒரு சிலரைத் தவிர பலர் காடுவெட்டி சேனை செய்தவர்கள் இவர்களில் பலருக்கு வாக்காளர் இடாப்பும், காணி அனுமதிப் பத்திரமும் இருக்கவில்லை. அனுமதிப்பத்திரம் இருந்த சிலர் குறிப்பிட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு விற்று விட்டனர். வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ள, அனுமதிப்பத்திரமும் உள்ள ஒருசிலரே மீளக்குடியமர்ந்துள்ளனர். வாக்காளர் இடாப்பில் பெயர் அற்றவர்களும், காணியை விற்றவர்களும் அவர்களது உறவினர்களும் என பலர் மீளக்குடியேறி வருகின்றனர். இப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்த மேற்குறிப்பிட்ட பலருக்கு மாவட்டத்தின் வேறு இடங்களில் காணிகளும், வீடுகளும் கடந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
- மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவில் கச்சைக்கொடி சுவாமிமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் கெவிளியாமடு கிராமத்தில் 1986ம் ஆண்டு இனக்கலவரத்தில்104 குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. கடந்த இரண்டு வருட காலத்தில் 18 குடும்பங்கள் வரையில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பெறுமதியான வீடுகள் மாத்திரம் வழங்கப்பட்ட போதும் ஏனைய 86 குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படவில்லை. இவர்கள் களுதாவளை, தேத்தாத்தீவு போன்ற கிராமங்களில் வாழ்கின்றனர். 1986ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் இந்த 86 குடும்பங்களுக்கு இருந்தும் இவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை.
- மாவட்டத்தின் பல தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளவர்களில் 1986, 1990,2002ம் ஆண்டுகளில் இடம் பெயர்ந்த பலரும், இந்தியாவில் இருந்து மீளக்குடியமர்ந்த பலரும், வன்னியிலிருந்து மீளக்குடியமர்ந்த பல குடும்பங்களும், சொந்த மாவட்டத்திற்குள் இடம் பெயர்ந்த மீளக்குடியேறிய பலரும் என அநேகர் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமான வீட்டு வசதிகள் இன்றுவரை செய்து கெடுக்கப்படவில்லை.
- மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக 19500 விதவைகள் உள்ளனர். சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அண்ணளவாக 850 விதவைகள் சொந்தமாக வீடற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
- கடந்த காலங்களில் வறுமை காரணமாகவும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக உள்ளனர்.
- கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவில் வடமுனை, ஊத்துச்சேனை கருங்காளியடிச்சேனை ஆகிய கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய பலர் உள்ளனர். இவர்களுக்கான வீடமைப்பு திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும.;
- கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் 1987, 1990ம் ஆண்டுகளில் தோணிதாட்டமடு, ஒமடியாமடு, வாகரையூணியன்கொளணி, கேணிநகர் போன்ற கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கும் 1983 தொடக்கம் 2002வரை பல தடவைகள் இடம் பெயர்ந்த புணானைமேற்கு பகுதியில் உள்ள நான்கு கிராம மக்களுக்கும் இதுவரை நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை.
- போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இராணமடு கிராமத்தில் இடம் பெயர்ந்து மீளக்குடியேறியவர்களுக்கும் 1990ல் மண்டூர். பாலமுனை கிராமத்தில் இராணுவமுகாம், பொலிஸ்முகாம் போன்றவை அமைக்கபபட்டதால் வீடுகள் அழிவிற்குள்ளான 28 பேருக்கும் இன்னும் வீட்டு வசதிகள் செய்யப்படவில்லை.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் வீட்டு வசதிகளுக்காக ஏங்குகையில் அரசியல் பலம் மிக்கவர்களால் சிலருக்கு வேறு இடங்களில் காணிகளும், வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் அநீதியான முறையில் சிலருக்கு மீளக் குடியமர்வுக்கான கொடுப்பனவை வழங்கவும் முற்படுவதில் நியாயம் இருக்க முடியாது என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
குறித்த உதவிகள் வழங்கப்படும் போது கட்சி சார்ந்த உதவி தவிர்த்து பொதுவான விதி முறையினை நடைமுறைப்படுத்துமாறு மிக அன்பாக கேட்டுக்கொள்கின்றேன், என அவரது அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgpz.html
Geen opmerkingen:
Een reactie posten