[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 09:59.15 AM GMT ]
குறிப்பாக நுவரெலியா, பதுளை மாவட்டங்களிலிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மலையக பெருந்தோட்ட மக்களின் அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களான மண்ணெண்ணெய், கோதுமை மாவு, போன்ற பொருட்கள் பழைய விலைக்கே விற்கப்படுவதாக தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பால்மாக்களும் பழைய விலைக்கே விற்கப்படுகின்றன. இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு முறைப்பாட்டை தெரிவித்தால் நாங்கள் கவனிக்கிறோம் என்று மட்டுமே பதில் தரப்படுவதாக கூறப்படுகிறது.
மக்களின் சுமையை குறைக்கும் வரவு செலவு திட்டம் என அறிவித்து விட்டு விலைகளையும் குறைத்துள்ள அரசாங்கம் அது முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்காமலிருப்பது மக்களின் நலனில் அக்கறையில்லாதிருப்பதற்கு சமனாகும்.
அதை விட புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து தற்போது அமைச்சுப் பதவிகளில் இருக்கும் பிரதிநிதிகளும் இதை கண்டு கொள்வதாக இல்லை. ஜனாதிபதி எளிமையை பின்பற்றுகிறார் என்ற விடயத்தை முன்வைத்து இவர்களும் எளிமையாக கடமைகளை செய்வதாகக் கூறுகிறார்கள், இதில் தாம் ஆதரவளிக்கும் அரசாங்கத்தின் பயன்கள் மக்களை சென்றடைந்துள்ளதா என்பதையும் ஆராய்ந்து பார்த்தல் அவசியம்.
சில வர்த்தக ஸ்தாபனங்களில் மண்ணெண்ணெய் லீற்றர் 70 ரூபாவுக்கு விற்கப்படுகிறது, அதுமட்டுமில்லாது சிலிண்டர் காஸ் ஒன்றிற்கு வழமையான விலையை விட 125 ரூபா அதிகமாக விற்கப்படுகிறது. கேட்டால் போக்குவரத்து செலவு என்றும் குறைவாக வாங்க வேண்டுமானால் பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று வாங்கிக் கொள்ளவும் என பதில் தரப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கைச் செலவு உட்பட பல விடயங்களில் தமக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மாற்றத்திற்காக வாக்களித்தோம், எனினும் மாற்றங்கள் அறிவித்தலாக உள்ளனவே ஒழிய அமுல்படுத்தக் காணோம் என சிலர் அங்கலாய்க்கின்றனர்.
இது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயம். ஆகவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா?
மகிந்தவின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தினால் மைத்திரிக்கு வெற்றி!: சம்பிக்க ரணவக்க
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 10:28.24 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றது எவ்வித அதிசயத்தினாலும் இடம்பெற்ற ஒன்றல்ல என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிரான தேசிய இயக்க மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களுக்கு தெரியும் நிறைய பேர் மகிந்த ராஜபக்சவிற்கு கிடைத்த 58 லட்ச வாக்குகள் தொடர்பாகவே பேசுகிறார்கள்.
பாரிய பணம் செலவு செய்து நடத்தப்பட்ட தேர்தல் வியாபாரத்திரத்தின் மூலமே அவ்வளவு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.
சகல ஊடக நீதிகளையும் உடைத்து பிரச்சார நடவடிக்கைகள் இடம் பெற்றது. அப்படியெல்லாம் செய்தும் எப்படி தோல்வியுற்றார் என்பதே இன்னமும் சிலருக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
மைத்திரிபால தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றார், முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றார், ஐ.தே.க மூலம் வெற்றி பெற்றார், ஜே.வி.பியினரால் வெற்றி பெற்றார்கள் என்று சிலர் பேசுகிறார்கள் அவர்கள் அனைவரது ஆதரவும் கிடைத்தது அது உண்மை.
ஆனாலும் மகிந்த 57 லட்ச வாக்குகள் தேர்தல் வியாபாரத்தின் மூலம் பெற்றுக்கொண்டும் தோல்வியடைந்ததன் காரணம் இந்த ஊழல் மோசடி தொடர்பாக மக்களினுள் ஏற்பட்ட சமூக கோட்பாட்டினாலேயே, விசேடமாக வல்லுனர்களின் சமூக கோட்பாட்டினாலேயே என அமைச்சர் பாட்டலி சமபிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஒரு வாக்கிற்காக 43,000 ரூபாய் செலவு செய்த மகிந்த, மொத்தம் 250 மில்லியன்: பாட்டலி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 57 லட்ச வாக்குகளை பெற்றுள்ளார்.
அவர் ஒரு வாக்கிற்காக 43000 ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும் என கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் பணம் மூலம் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என புது டில்லி நிரூபித்து காட்டுகிறது அதற்கான மாதிரியை வெளிப்படுதியவர்கள் இலங்கையை விட்டு செல்வார்களா என அமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலுக்காக 250 மில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளார் என அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgp3.html
ஜனாதிபதி தலைமையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 10:48.34 AM GMT ]
குறித்த கலந்துரையாடலில் அத்துரலிய ரதன தேரர், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யு.டீ.பஸ்நாயக்க ஆகியோருடன் பொலிஸ்மா அதிபர், முப்படைத் தளபதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருவரும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் தினமன்று இரவு இராணுவச் சதி முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை அறிக்கைக்குக் காத்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது
மகிந்த, கோத்தா இராணுவச் சதி முயற்சி: சட்டமா அதிபரின் அறிக்கைக்காக காத்திருப்பு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 10:57.22 AM GMT ]
அமைச்சர் மங்கள சமரவீர செய்திருக்கும் முறைப்பாட்டுக்கு அமையவே இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருவருக்குப் புறம்பாக முன்னைய ஆட்சியின் போது பிரதம நீதியரசராக அமர்த்தப்பட்டிருந்த மொஹான் பீரிஸுக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவ, கடற்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கப் பெற்றவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgp6.html
Geen opmerkingen:
Een reactie posten