[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 09:57.46 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் பா.உறுப்பினர் சிவநேசன் நினைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, சி.சிறீதரன், முன்னாள் பா.உறுப்பினர் கஜேந்திரன், ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் மூலம் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மறைந்த பா.உறுப்பினர் சிவநேசன் விடுதலைப் போராட்டத்தில் நீண்ட காலமாக தனது பங்கை திறம்பட ஆற்றியவர். சமூகத்தின் பல்வேறு அமைப்புக்களில் சிறந்த நிர்வாகியாக இருந்து இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்ட மனிதர்.
1957 ஜனவரி 21ம் நாள் பிறந்த இவர், யாழ் கரவெட்டி நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று, பனை, தென்னை, வள கூட்டுறவு அமைப்புக்களில் கடமைகளை ஆற்றி, பனை, தென்னை, வன கூட்டுறவின் வளர்ச்சிக்கு பெரும் பங்கை ஆற்றி 1996ம் ஆண்டு தொடக்கம் 2004 வரை வடபிராந்திய பனை, தென்னை, கூட்டுறவு அமைப்பின் பொதுமுகாமையாளராக உயர் பதவி வகித்திருந்தார்.
அதே வேளை விடுதலைப் போராட்டத்தின் மக்கள் மயப்படுத்தல் பணிகளில் சிற்றூர் அவை போர் எழுச்சிக்குழுக்கள் என்பவற்றில் முன்னின்று பணிகள் செய்த ஓயாத மனிதராக அவர் அறிய்பபட்டவராக இருந்தார்.
2004ம் ஆண்டு இலங்கை பொதுத் தேர்தலை எதிர்கொண்ட போது மக்கள் செல்வாக்கு மிக்க சிவநேசன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒரு வேட்பாளர்களில் ஒருவராக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றார்.
பாதைகள் மூடப்பட்ட நிலையில் வன்னியில் போர் உக்கிரம் கொண்ட சூழலில் மக்கள் பணியில் சிவநேசன் களத்தில் நின்றார்.
மகிந்த அரசாங்கத்தால் வன்னிக்குள் ஆழஊடுருவும் அணி என்ற பெயரில் அப்பாவி மக்களை பலியெடுக்கப்பட்ட சிறிலங்கா படை அணியால் கொழும்பில் இருந்து வந்து கொண்டிருந்த பா.உறுப்பினர் சி.சிவனேசன் மாங்குளம் கானக வீதியில் வைத்து கிளைமோர் மூலம் இலக்கு வைக்கப்பட்டார்.
2008ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் அவர் பயணித்த வாகனம் கிளைமோர் தாக்குதலை மகிந்த அரசாங்கத்தின் கோழைத்தனமான ஆழஊடுருவும் படையணி தாக்குதலை நடாத்தியது.சம்பவ இடத்திலேயே அவரது சாரதி பெரியண்ணன் மகேஸ்வரராசா கொல்லப்பட்டார்.
படுகாயமடைந்த பா.உறுப்பினர் சி.சிவநேசன் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் உயிரிழந்தார்.
சிவநேசனின் மரணம் எல்லோர் மனதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. சிவநேசனின் மறைவுக்கு நேரடியாக வந்து தமிழர்களின் தலைவர் பிரபாகரன் வணக்கம் செலுத்தியதுடன் மாமனிதர் என்ற உயரிய கௌரவத்தையும் அளித்தது கடந்த கால வரலாறு.
அத்தகைய மாமனிதர் நினைவாக அவர் பிறந்து வாழ்ந்த கரவெட்டியில் அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருப்பது எல்லோர் மனதிலும் மகிழ்வான செய்தியாக அமைந்திருக்கின்றது.
நேற்று நடைபெற்ற இந்த அரங்கு திறப்புவிழா வைபவத்தில் தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா, பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சிவயோகன், சுகிர்தன், கரவெட்டி தெற்குமேற்கு பிரதேசசபை தலைவர் வியாகேசு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
மறைந்த பா.உறுப்பினர் சிவநேசனின் உருவப்படத்திற்கு சுடடேற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு அரங்கு திறந்துவைக்கப்பட்டதுடன் சிவநேசனின் படம் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னங்களும் விருந்தினர்களுக்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcewy.html
குமார் குணரட்னத்தை நாடு கடத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 10:02.14 AM GMT ]
இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடைபெற்றது.
நல்லாட்சி எனக் கூறி ஆட்சிக்கு வந்த ரணில் மற்றும் மைத்திரி அரசாங்கம் முதல் வேட்டை தீர்த்துள்ளதாகவும் நபர்கள் அரசியலில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை மீறி செயற்பட்டுள்ளதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcewz.html
Geen opmerkingen:
Een reactie posten