[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 09:37.41 AM GMT ]
பட்ஜெட் மூலம் பொருள்களின் விலை குறைவடைந்தாலும் யாழ்.குடாநாட்டைப் பொறுத்தமட்டில் பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்துவிட முடியாது என யாழ்.வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் புதிய ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை ஆகியவற்றின் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், யாழ்.மாவட்டத்தில் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களில் சீனி, கோதுமை மா, போன்ற பொருட்கள் விலைக் குறைப்புச் செய்யப்படாத நிலை காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக மக்கள் பல முறைப்பாடுகளை கொடுத்து வருகின்றனர். இதனையடுத்து யாழ்.மாவட்டச் செயலகத்தின் கீழ் இயங்கும் பாவனையாளர் அதிகாரசபையினர் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு 25 வர்த்தக நிலையங்களை நேற்றைய தினம் சோதனையிட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அத்தியாவசிய பொருட்களை பொறுத்தவரையில் குடாநாட்டு வர்த்தகர்கள் அவற்றை உற்பத்தி செய்வது கிடையாது. வெளியிலிருந்து கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்கிறார்கள்.
எனவே தற்போதுள்ள பொருட்கள், விலைக் குறைப்பிற்கு முன்னர் இருந்த விலைக்கு கொள்வனவு செய்திருக்கும் பொருட்கள்.
எனவே திடீரென விலைக் குறைப்பினை அறிவித்தால் பெருமளவு நஷ்டம் வர்த்தகர்களுக்கு ஏற்படும். எனவே அதற்கு ஒரு வாரம் என்றாலும் கால அவகாசம் தேவை. அதற்காக தொடர்ந்தும் முன்னைய விலைக்கே, விற்பனை செய்ய முடியாது.
கால அவகாசத்தில் அந்தப் பொருட்களுக்கான விலைக்குறைப்பினை செய்யலாம். இதற்கு மேலதிகமாக சமையல் எரிவாயுவை எடுத்துக் கொண்டால் சமையல் எரிவாயு யாழ்.குடாநாட்டுக்கு கொண்டு வருவதற்குரிய செலவினை சமையல் எரிவாயு நிறுவனங்கள் வர்த்தகர்கள் மீது சுமத்துகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்காக செலுத்திய பணத்தினை அவர்கள் எரிவாயு சிலின்டர்களின் விலையிலேயே ஈடுகட்ட வேண்டியிருக்கின்றது.
கொழும்பில் ஒரு சமையல் எரிவாயு சிலின்டர் வாங்கும் விலைக்கும் யாழ்ப்பாணத்தில் ஒரு சிலின்டர் வாங்கும் விலைக்கும் வித்தியாசம் இருக்கும்.
எனவே இந்த விடயத்தில் சமையல் எரிவாயு நிறுவனங்களே அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcev5.html
தலவாக்கலை பிரதேசத்தில் ரயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்- பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 09:50.57 AM GMT ]
இதுதொடர்பாக தெரியவருவதாவது,
தலவாக்கலை நகரத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த பொலிஸார் சம்பந்தப்பட்ட இளைஞர் (மாரிமுத்து மனோஜ் வயது 20) பாபுள் வெற்றிலையை வைத்திருந்ததாக கூறி பொலிஸார் கைது செய்ய முயற்சி செய்த போது பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடியதால் சம்பந்தப்பட்ட இளைஞனை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.
இதனை அவதானித்த நபர் நீர்த்தேக்கத்தில் பாய்ந்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவத்தினை கண்டித்து நேற்று மாலை தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியை மறித்து பொலிஸ் நிலையத்திற்கு முன்பு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் பிரதேசத்தில் பதட்டநிலை காணப்பட்டது. எனினும் இளைஞனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுப்பட்டபோதிலும் காணாமல் போனவரை குறிப்பிட்ட நேரத்தில் மீட்கவில்லை என கூறி இன்று காலை 10 மணியளவில் அதிகமான மக்கள் ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகர மத்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து சேவை பல மணிநேரம் பாதிப்பு ஏற்பட்டது. அத்தோடு அதன் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது பல மணி நேரம் புகையிரத சேவை சம்பவ இடத்தில் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் புகையிரதம் திரும்பி நானுஓயா வரை சென்றது. இதேவேளை பாதுகாப்பு கருதி பொலிஸாரும் அதிரடி படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்
தலவாக்கலை பகுதியில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcev6.html
Geen opmerkingen:
Een reactie posten