தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 februari 2015

ஐ.தே.கட்சியின் ஊழல்கள் குறித்து முறைப்பாடு செய்வோம்!– மகிந்தானந்த அளுத்கமகே



லண்டனில் வாழும் சாந்தீபன் குடும்பத்தினர் கிளிநொச்சி உறவுகளுக்கு உதவி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 11:06.26 AM GMT ]
புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாந்தீபன் (ரதன்) குடும்பத்தினர் அண்மையில் கிளிநொச்சி வந்து பா.உறுப்பினர் சி.சிறீதரனை சந்தித்து கலந்துரையாடிய பின், போர் மற்றும் நோயால் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு நிதி உதவியை வழங்கியுள்ளனர்.
 தலா பத்தாயிரம் ரூபா வீதம் பத்து குடும்பங்களுக்கு கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் போன்றவற்றிற்காக உதவி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் கடந்த 6ம் திகதி நடைபெற்ற நிகழ்வில் இந்த உதவிகளை வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுரேன், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன், மாற்றுவலுவுள்ளோர் நலன்கள் தொடர்பான பணியில் ஈடுபடும் சாந்தி, திருமதி சாந்தீபன், சாந்தீபனின் தந்தையார் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.
இதில் உதவிகளை வழங்கிவைத்து கருத்து தெரிவித்த சாந்தீபன்(ரதன்)
உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கு மிக்க நன்றிகள், உங்கள் தொடர்பான சேதிகளை நாம் இலண்டனில் இருந்துகொண்டு அறிந்திருக்கின்றோம்.
அதன் தூண்டுதலில்தான் இங்கு வந்தபோது என்னால் முடிந்த உதவிகளை எமது மண்ணின் உறவுகளுக்கு வழங்கவிரும்பினேன்.
பொருளாதாரத்தில் உங்களுக்கு உள்ள நெருக்கடிகளை நாம் இங்கு வந்தபொழுது நேரடியாக காணுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
இதன் மூலம் நானும் மேலும் எமது நட்பு வட்டங்களும் உங்களை போன்றவர்களுக்கு உதவிகளை வழங்க முனைவோம் உங்களுக்கு உதவுகின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகள் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjr4.html

சுதந்திர கட்சியை அழிக்க சூழ்ச்சி! மைத்திரியின் நடிப்பு சில காலங்களுக்கே: விதுர விக்ரமநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 11:29.27 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றிக்கொண்டிருப்பது மிகப்பெரிய ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் எனவும் இந்த நல்லாட்சியின் நாடகம் இன்னும் சில காலங்களில் வெளியாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியினர் மீது சேறு பூசுகின்ற மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விநியோகம் செய்ய தற்பொழுது சூழ்ச்சி இடம் பெறுகின்றது.
இவர்கள் ஜனாதிபதியுடன் இருப்பது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்றுக்கொள்வதற்கே. ஜனாதிபதியை சுற்றியிருப்பது மிகபெரிய ஒப்பந்தக்காரர்களும் கடத்தல்காரர்களுமே. அதனால் சுதந்திர கட்சி மீது சேர் பூசுவதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள மாட்டார்.
இந்நாட்டு மக்களுக்கு இன்னும் சிறிது காலத்ததில் புரியும், நல்லாட்சியின் மைத்திரி யுகத்தின் நாடகம் என்னவென்று அதனால் நாம் தொடர்ந்து செல்வோம் என்று தான் என்னால் சொல்ல முடியும் என விதுர விக்ரமநாயக்க இங்கிரியவில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார்.


மகிந்த வெளியேறுவதற்கு முன் அலரி மாளிகையில் இருந்த கணனிகளில் இருந்து அகற்றப்பட்ட வன் இயக்கிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 12:29.41 PM GMT ]
அலரி மாளிகையில் இருந்த 120க்கும் மேற்பட்ட கணனிகள் வன் இயக்கிகள் (hard drives) காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அலரி மாளிகையில் இயங்கிய விசேட பிரிவு ஒன்றில் இருந்து இந்த கணனிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த விசேட பிரிவில் 160 கணனிகள் இருந்ததுடன் அவற்றில் பெரும்பாலானவற்றில் வன் இயக்கிகள் இருக்கவில்லை.
மேற்படி விசேட கணனிப் பிரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான முகாமையாளராக இருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
160 கணனிகள் தேர்தல் தொகுதிகளுக்கு தனித்தனியாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் தொகுதிகளில் இருந்த இணைப்பாளர்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் விபரங்களுக்கான இந்த கணனிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான நீலப் படையணியை சேர்ந்த பலர் இந்த பிரிவில் பணியாற்றி வந்தனர்.
வடக்கு, கிழக்கை தவிர நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளும் உள்ளடங்கும் வகையில் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான விடயங்கள் செயற்படுத்துவதற்காக இந்த கணனிப் பிரிவு அலுவலகம் அலரி மாளிகையில் இயங்கியுள்ளது. மகிந்த ராஜபக்ச சாதகமற்ற எதிர்க்கட்சிக்கு செல்வாக்குமிக்க தொகுதிகள் பற்றி அவர்கள் அறிந்திருந்தனர்.
தேர்தல் நடைபெற்ற தினத்திலும் இந்த கணனிப் பிரிவு முற்றாக இயங்கியதாக முன்னாள் அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
ஜனவரி 8ம் திகதி அதிகாலை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், கணனிகளில் இருந்த வன் இயக்கிகள் அகற்றப்பட்டிருப்பதாக தற்போதைய பிரதமர் அலுவலகத்தின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjsy.html

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைத் தேர்தல்கள் தொடர்பில் குழப்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 12:31.05 PM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு பழைய வேட்புமனுவின் படியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ம் ஆண்டு இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் வாக்களிப்பு இடைநிறுத்தப்பட்டது.
தற்போது, இரண்டு பிரதேச சபைகளுக்கும்ட நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ள நிலையில், எதிர்வரும் 28ம் திகதி தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
ஆனால், 2011ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவது குழப்பங்களுக்கே வழி வகுக்கும் என்று பல்வேறு கட்சிகளும் கருத்து வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே இரண்டு முறை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பிற்போடப்பட்டதாகவும், இதனால் பெருமளவு செலவுகள் ஏற்பட்ட நிலையில், புதிய வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் கோரினால் அதற்கெதிராக நீதிமன்றம் செல்லப் போவதாக ஐதேகவின் சார்பில் புதுக்குடியிருப்பு பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் குமாரவேல் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கரைத்துறைப் பற்று பிரதேசபையின் 9 ஆசனங்களுக்கு 15 வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருந்தது. இவர்களில் மூன்று பேர் வேறு கட்சிகளுக்குத் தாவிச் சென்று விட்டனர், மேலும் இருவர் வெளிநாடு சென்று விட்டனர்.
கரைத்துறைப்பற்று பிரதேசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்த அன்ரனி ஜெயநாதன், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாகாணசபை உறுப்பினராகத் தெரிவாகி விட்டார்.
“மாகாணசபை உறுப்பினராக உள்ள நிலையில், இன்னொரு தேர்தலில் நான் போட்டியிட முடியாது, தேர்தல் ஆணையாளர் பழைய வேட்புமனுவின் படியே தேர்தலை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்னமும் எமது கட்சி தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கவில்லை என்று அன்ரனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்த, கனகசுந்தரசுவாமி வீரவாகுவும், வடக்கு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவாகி விட்டார்.
அதேவேளை, தேர்தல் ஆணையாளர் புதிய வேட்புமனுவைக் கோரினால், தாம் தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி தெரிவித்துள்ளது.
கடந்தகாலத்தில் கிடைத்த சில மோசமான அனுபவங்கள் இந்த முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்தப் பகுதி மக்கள் எமது கட்சி சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவதை விரும்புகின்றனர். ஆனால், தேசிய அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் எமது கூட்டணி தொடரும்” என்று ஈபிடிபி பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட, வேட்புமனுத் தாக்கல் செய்த 15 பேரில், 10 பேர் தமது பெயர்களை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம், கடிதம் கொடுத்துள்ளனர்.
இறுதிப் போர் நடந்த எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்ய வேண்டியிருந்தது.
தற்போது மக்களின் ஆணை வேறுவிதமாக அமைந்துள்ளது. எமது வேட்பாளர்களில் ஒருவர் வெளிநாடு சென்று விட்டார்.
எம்மால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட முடியாது” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளராக கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த வீரசிங்கம் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதிய வேட்புமனுக் கோரப்படாது போனால், தேர்தலைப் புறக்கணிப்போம் என்று கரைத்துறைப்பற்று பிரதேச மக்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjsz.html

ஐ.தே.கட்சியின் ஊழல்கள் குறித்து முறைப்பாடு செய்வோம்!– மகிந்தானந்த அளுத்கமகே
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 12:40.33 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அது சம்பந்தமான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு மிக விரைவில் இந்த முறைப்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலஞ்சம் ஆணைக்குழுவுக்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஆவணங்களை சமர்ப்பிப்பது தற்போது நகைப்புக்குரிய செயலாக மாறியுள்ளது.
தவறு செய்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தி தண்டனை வழங்குவதில் தவறில்லை.
தவறு செய்யாத நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் மோசடியாளர்களை என காட்டும் ஊடக கண்காட்சி நிறுத்தப்பட வேண்டும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjs0.html


Geen opmerkingen:

Een reactie posten