[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 08:49.24 AM GMT ]
பெயர் மாற்றும் வைபவம் எதிர்வரும் 10ம் திகதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
பெயர் மாற்றும் வைபவத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் பட்ரானியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி 2011ம் ஆண்டு 15ம் திகதி நெலும் பொக்குன மாவத்தையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இலங்கையில் பிறந்த கலை வரலாற்று ஆசிரியர் ஆனந்த குமாரசுவாமியின் பெயரை நீக்கி விட்டு நெலும் பொக்குன மாவத்தை என மாற்றி வைத்தமையினால் மக்கள் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆனந்த குமாரசுவாமி ஒரு சிறந்த தத்துவவாதி, காட்சி கலை மற்றும் அழகியற்கலை எழுத்தாளர், இலக்கியம், மற்றும் மொழி துறைகளில் இலங்கைக்கு புகழ் தேடித்தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- டெங்குக் காய்ச்சலினால் இருவர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 09:10.54 AM GMT ]
சம்பவத்தினால் இருவர் சிறு காயங்களுக்குள்ளானதுடன் வாகனங்களுக்கும் சேதமும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய டிப்பர் வாகனங்கள், முச்சக்கரவண்டி, சிறிய கப் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்களானது.
இதனால் வாகனங்கள் பெரும் சேதத்திற்குள்ளாகின. விபத்து காரணமாக சில மணிநேரம் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முதலில் சென்ற வாகனம் திடீரென பிறேக் போட்டமையால் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.
காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.
காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலினால் இருவர் பலி
டெங்கு காய்ச்சலினால் காத்தான்குடி நகர சபை பிரிவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
கடந்த 15 தினங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி இளைஞன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி புதிய காத்தான்குடி கோழி வியாபாரி வீதியைச் சேர்ந்த எம்.எச்.சிபான் (26) எனும் இளைஞனே இதில் உயிரிழந்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வீடு வந்தவருக்கு டெங்கு காய்ச்சல் எற்பட்டுள்ளது.
இதேவேளை, காத்தான்குடி நகர சபை பிரிவில் நேற்று சிறுமியொருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 7வயதுடைய ஏ.ஸாயிதா ஸித்னா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjq7.html
பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சில் ஈடுபடும் பிரதான கட்சிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 09:42.48 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி தம்முடன் இணைந்து போட்டியிட விரும்பு அரசியல் கட்சிகளை இணைத்து கொள்ள உள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தம்முடன் இணைந்து போட்டியிடக் கூடிய கட்சிகள் எவை என்பது ஆராய்ந்து வருகின்றது.
இதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் சிலர், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஹெல உறுமயவின் சார்பில் ஓமல் சோபித தேரர், அத்துரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கட்சியின் கொள்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் குழி தோண்டி புதைத்து விட்டது எனவும் அடுத்த தேர்தலில் கட்சியை சரியான வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும் எனவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுதந்திரக் கட்சியையும் ஜாதிக ஹெல உறுமயவையும் எடுத்துக்கொண்டால் இரண்டு கட்சிகளும் நெருங்கத்தை கொண்டுள்ளன எனவும் சுதந்திரக் கட்சியுடனேயே தமது கட்சிக்கு மிக நெருக்கமான பிணைப்பு இருப்பதாக சம்பிக்க ரணவக்க இதன் போது கூறியுள்ளார். அப்படியானால், நீங்கள் எங்களுடன் இணையுங்கள், ஒன்றாக தேர்தலை சந்திக்கலாம் என சுதந்திரக் கட்சியினர் யோசனை முன்வைத்துள்ளனர்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளதாக நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறியுள்ளார். தங்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் யோசனை முன்வைத்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் ஜாதிக ஹெல உறுமயவிற்கு தற்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது அல்லது சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவது ஆகிய தெரிவுகள் அந்த கட்சிக்கு உள்ளன. எனினும் இதுவரை ஜாதிக ஹெல உறுமய தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை கூறப்படுகிறது.
அதேவேளை மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி உள்ளிட்ட தென் பகுதியை சேர்ந்த சிறுபான்மை கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் முஸ்லிம் காங்கிரஸ் அது குறித்து இன்னும் தீர்மானங்களை எடுக்கவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்து வருவதுடன் பொதுத் தேர்தலில் போட்டியிட அந்த கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக்குள் வர முயற்சிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நிலையில், ஆறுமுகன் தொண்டமான் அமைதியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆட்சியில் தவறு செய்தவர்கள் தற்பொழுது நீதிவான்கள்: சம்பிக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 10:10.56 AM GMT ]
கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஆட்சி மூலம் பிரித்தானியாவுக்கு அடகு வைத்த நம் நாட்டு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மீண்டும் மீட்டெடுத்து அவ்வளங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
அவ்வாறான தவறுகளை மேற்கொண்டவர்கள் தற்பொழுது நீதிவான்கள் போன்று பேசுகின்றார்கள். ஆனாலும் இதனை அவிழ்ப்பதற்கு எங்களுக்கு சில காலங்கள் தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யோஷித்தவை கண்டுகொள்ளாமல் குமார் குணரத்னத்தை துரத்துகிறீர்கள்: நிர்மல் ரஞ்சித்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 10:42.14 AM GMT ]
கடந்த காலங்களில் யோசித்த பற்றிய பிரச்சினைகள் பேசினோம், அவர் தற்பொழுது கடற்படையை விட்டு தப்பி ஓடி விட்டார்.
ஆனாலும் அவருக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இது போன்று கைது செய்யப்படவேண்டிய அனேகர் உள்ளனர்.
ஆனாலும் பிரச்சனை இருப்பது குமார் குணரத்தனம் தொடர்பாக அதன் ஆரம்பத்தை ஏன் பின்பற்றவில்லை என மேலும் கலாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjr2.html
அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறி்னால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்!– பிரதமர்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 10:55.04 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாத தீர்மானம் நிறைவேற்றினால், 18வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நீக்கும் சந்தர்ப்பத்தை நாடு இழக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையில் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதுடன் அது சபாநாயகர் ஷாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை இதனால், நிறைவேற்ற முடியாது போகும்.
நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்த விவாதத்தை நடத்தி உடனடியாக திகதியை ஒதுக்குமாறு, பிரதமர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjr3.html
Geen opmerkingen:
Een reactie posten