[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 04:10.03 PM GMT ]
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.கஸ்தூரியார் வீதியில் நகைக்கடை வைத்திருக்கும் ச.மோகனதாஸ் என்பவரின் வீட்டிற்கு (பிறவுண் வீதி) கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்ற நெடுங்கேணி பொலிஸார் அவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்று உள்ளதாக கூறி (LG - 9591) என்ற இலக்கம் கொண்ட பொலிஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் 0242053008 என்ற இலக்கத்திலிருந்து அழைப்பு எடுத்த பொலிஸார் 10 பவுண் நகை மற்றும் பணம் கொடுத்தால் தந்தையை விடுவிப்போம் என வீட்டிலிருந்த குறித்த மோகனதாஸின் மகனுக்கு கூறியிருக்கின்றனர்.
இதன் பின்னர் மகன் யாழ். மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்ததுடன், வவுனியா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
இதன் பின்னர் ஆணைக்குழு நடத்திய விசாரணையின் போது தாங்கள் அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை. என கூறிய பொலிஸார் பின்னர் ஆணைக்குழுவின் கேள்விகள் கடுமையாக அமைந்தமையினையடுத்து கைதுசெய்ததாக ஒத்துக் கொண்டனர்.
பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு ஆணைக்குழு கேட்டபோதும் அவ்வாறு ஆஜர்படுத்தாமல் இருந்த பொலிஸார், சம்பவம் நடைபெற்று 3 தினங்களின் பின்னர் அதாவது நேற்றைய தினம் வவுனியா நீதிமன்றில், குறித்த நபரை ஆஜர் செய்து கடந்த வருடம் இடம்பெற்றதாக கூறப்படும் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் இவருக்கு தொடர்புள்ளதாக கூறி அவர்மீது பொய் குற்றச்சாட்டு ஒன்றினை பதிவு செயது 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் கேட்ட கப்பம் கொடுக்கவில்லை. என்பதற்காகவே தனது தந்தை மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக மகன் கூறியிருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfw5.html
ஐ.நாவின் விசாரணை அறிக்கை உரிய காலத்தில் வெளியிடப்பட வேண்டும்: மாவை எம்.பி
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 04:14.00 PM GMT ]
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஆய்வு அறிக்கையினை தாமதப்படுத்தி வெளியிடுவதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, குறித்த அறிக்கை முன்னர் தீர்மானிக்கப்பட்ட காலத்திலேயே வெளியாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மார்ச் மாதம் ஜெனீவா சென்று அதற்கான அழுத்தங்களை கொடுப்பதுடன், குறித்த இலங்கை மீதான சர்வதேச விசாரணையினை முன்வைத்த நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தி அறிக்கையினை திட்டமிட்டவாறு வெளியிடுவதற்கான அழுத்தங்களை கொடுங்கும் எனவும் கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.ஊடகவியலாளர்களுடன் கருத்துப் பகிர்கையிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளருக்கும், அமெரிக்காவுக்கும் குறித்த அறிக்கையினை உரிய காலத்தில் வெளியிடுமாறு கோரி நாம் கடிதம் அனுப்பியுள்ளோம்.
அந்தவகையில் நாம் சர்வதேச விசாரணை அறிக்கையினை உரிய காலத்தில் வெளிட வேண்டும் எனகோருவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு அழுத்தம் கொடுப்பதுடன், அதற்கு முன்னதாக குறித்த சர்வதேச விசாரணை தீர்மானத்தை முன் வைத்த நாடுகளுடன் பேச்சு நடத்தவும் தீர்மானித்துள்ளதாக கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfw6.html
Geen opmerkingen:
Een reactie posten