14 Feb 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423914166&archive=&start_from=&ucat=1&
இராணுவ அதிகாரிகள் 10பேர் சேவையில் இணைப்பு
|
2010 ஜனாதிபதி தேர்தலின் பின்னர், கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டபட்ட இராணுவ அதிகாரிகள் 10 பேரையும் மீண்டும் சேவையில் இணைத்துகொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
இதில் மேஜர் ஜெனரல், பிரிகேடியர்கள் 5 பேர். கேர்ணல், லெப்டினன் கேர்ணல், கேப்டன்கள் இருவர் அடங்குவர். http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423914512&archive=&start_from=&ucat=1&
| தலதா மாளிகையில் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்! (படங்கள் இணைப்பு) |
புதிய பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் இன்று தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், அவர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
மாநாயக்க தேரர்கள் பிரதம நீதியரசர் தனது பணியை சரியான முறையில் செய்ய ஆசி வழங்கியுள்ளனர்.

 |
14 Feb 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1423914841&archive=&start_from=&ucat=1&
அதிகாரம் சந்திரிக்காவிடம்
|
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசனை பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கட்சியின் மத்திய குழு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யும் அதிகாரம் இந்த ஆலோசனை பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை பேரவையின் தலைவர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர்களான டி.எம். ஜயரத்ன, ரட்ணசிறி விக்ரமநாயக்க ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் இன்று கூடிய சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை தெரிவு செய்ய தீர்மானித்தாக கட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
| 14 Feb 2015 |
|
|
|
Geen opmerkingen:
Een reactie posten