தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

காணாமல் போனோர் ஆணைக்குழு திருகோணமலையில் கூடுகிறது

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சில் பாரிய ஊழல்கள்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 04:01.13 PM GMT ]
முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தேசிய மொழிகள் மற்றும் சமூகத்துறை அமைச்சில், பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்குகள் குழு இதனை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த குழுவுக்கு தலைமை தாங்கும் முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம சில நாட்களுக்கு முன்னர் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதன்படி வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சில் அதிகாரிகள் மட்டத்தில் முறைகேடுகளும் ஊழல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சினால், மேற்கொள்ளப்பட்ட திட்டங்களும் தோல்வியடைந்துள்ளன.  2005ஆம் ஆண்டில், வாசுதேவவின் அமைச்சுக்கு யுஎன்டிபியினால் 2,221,988 ரூபாய்கள் வழங்கப்பட்டன.
வடக்கில் மும்மொழி கொள்கை திட்டத்துக்காக இது வழங்கப்பட்டது
எனினும் 2011 டிசம்பர் 20ஆம் திகதிவரை 170, 360 ரூபா பயன்படுத்தப்படாமலேயே பொதுக்கணக்குக்கு திரும்பியது.
அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களுக்கு மேலதிகமாக 6 வாகனங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதன்காரணமாக அதிகமான செலவு ஏற்பட்டது.
குறித்த அமைச்சு நிதிச்சட்டத்தின் 75.1, 75.2 பந்திகளின் சரத்துக்களை உரிய வகையில் பின்பற்றவில்லை.
இதேவேளை அமைச்சினால் ஆலோசகர்களுக்கு 1,267,750 ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன. எனினும் இதற்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
2006, 2007 ஆம் ஆண்டுகளில் தமிழ் மொழி விரிவுரையாளர்களுக்காக அமைச்சினால் 3, 643, 420 ரூபாய்களும் 5, 637, 676 ரூபாய்களும் செலுத்தப்பட்டுள்ளன.
எனினும் இந்த விரிவுரைகளுக்காக உரிய பாடத்திட்டங்கள் எவையும் பின்பற்றப்படவில்லை என்று நாடாளுமன்றக்குழு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfw4.html

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக அங்கஜன் தெரிவு
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 03:54.27 PM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான இராமநாதன் அங்கஜன் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இன்று தெரிவு செய்யப்பட்டார்.
இன்று சனிக்கிழமை கொழும்பு, பத்தரமுல்லையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழர் அங்கஜன் ஆவார்.
முன்னதாக மகிந்த ராஜபக்சவினால், சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தமிழரான முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது, சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர்களான ரத்னசிறி விக்கிரமநாயக்க, டி.எம்.ஜெயரட்ண ஆகியோரும், கட்சியின் மூத்த உறுப்பினரான அலவி மௌலானாவும், ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன ஆகியோர் கட்சியின் மூத்த துணைத் தலைவர்களாகவும், ராஜித சேனாரத்ன, எஸ்.பி.திசநாயக்க, பியசேன கமகே, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோர் கட்சியின் துணைத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கெட்டேகொட பதவி விலகினால் மாத்திரமே சரத் பதவியேற்க முடியும்!- தேர்தல்கள் ஆணையாளர்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 03:02.47 PM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கொட்டேகொட பதவிவிலகினால் மாத்திரமே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாää நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கமுடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஜெயந்த கெட்டோகொடவுக்கு பதிலாக சரத் பொன்சேகாவே நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற செயலாளருக்கு தாம் பரிந்துரை விடுக்கமுடியும்.
எனினும் அதற்கு கெட்டேகொட, பதவி விலகவேண்டும் என்று மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக கருதப்பட்ட சரத் பொன்சேகாவின் பதவி பறிக்கப்பட்டு அவரின் இடத்துக்கு கெட்டேகொட நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனää சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பை வழங்கினார்.
இதனையடுத்து சரத் பொன்சேகா மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கான தடைகள் நீங்கின.
இதேவேளை தாம் நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவதாக ஜெயந்த கொட்டேகொட கடந்த ஜனவரி 18ம் திகதி தெரிவித்திருந்த போதும் இதுவரை பதவி விலகவில்லை.
இதன் காரணமாக சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக வரும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfw2.html

காணாமல் போனோர் ஆணைக்குழு திருகோணமலையில் கூடுகிறது
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 02:48.57 PM GMT ]
காலநீடிப்பை அடுத்து காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு தமது அடுத்த அமர்வை திருகோணமலையில் நடத்தவுள்ளது.
இதன்படி பெப்ரவரி 28 மற்றும் மார்ச் முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் திகதிகளில் இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
நாளை 15ம் திகதி வரையிலேயே ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் வரையறுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை எதிர்வரும் 6 மாதங்களுக்கு நீடித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfw1.html

Geen opmerkingen:

Een reactie posten