[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 01:15.59 AM GMT ]
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேற்று மாலை பத்தரமுல்லையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுசில் பிரேமஜயந்த கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து விலகினார் நாமல்!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 01:23.19 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியிலிருந்து நாமல் ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார்.
இதனையாடுத்து அந்தப் பதவிக்கு சாந்த பண்டாரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
நேற்றைய மத்திய குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
அறிக்கையை வெளிவராமல் தடுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை ஏற்க முடியாது!- தமிழ் கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 01:31.17 AM GMT ]
இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளவை வருமாறு:-
இலங்கை மீதான விசாரணை அறிக்கையை ஐ.நா. வெளியிட்டதன் பின்னர் இடம்பெறும் தொடர் நடவடிக்கையே மிக முக்கியமானதாகும். அந்தத் தொடர் நடவடிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸில் இறுக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச விசாரணை குறித்த அறிக்கை வெளிவர வேண்டும். இந்த அறிக்கைதான் உண்மையைக் கண்டறிவதற்கான அத்திவாரமாக இருக்கும்.
உண்மையைக் கண்டறியாமல் அல்லது உண்மையைக் கண்டறிந்து அதை மூடிமறைத்து நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
தற்போது உள்ளூர் விசாரணையை நடத்துவதற்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற இருப்பதாக அரசு கூறுகின்றது.
உள்ளூர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் மேற்பார்வையின் கீழ் உள்ளக விசாரணை இடம்பெறுவதற்கு உத்தரவாதம் கொடுத்தால், அதை நாம் வரவேற்போம்.
ஆனால், அறிக்கையை வரவிடாமல் தடுத்து, உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஐ.நா. விசாரணையின் போது விசாரணையாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. அவர்களுடைய காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணையை நடத்த இலங்கை அரசு இடமளித்தால், காலத்தை நீடிக்க நாம் இணக்கம் தெரிவிக்கலாம்.
எனவே, விசாரணை தொடர்பில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இலங்கை அரசு எந்தவிதமான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றது என்று எமக்குத் தெரியவேண்டும். அது தெரிந்தால்தான் அதை ஆதரிக்கலாமா? இல்லையா என்று முடிவு செய்யலாம் என்றார் பா.உ. சுமந்திரன்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdfx4.html
விமான நிலையங்களில் இருந்து விமானப்படையினர் அகற்றப்படுவர்: அர்ஜூன ரணதுங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 01:42.55 AM GMT ]
இதன்படி 14 விமான நிலையங்களில் இருந்து விமானப்படையினர் அகற்றப்படவுள்ளனர்.
இதேவேளை, சில விமான நிலையங்களின் விஸ்தரிப்புக்களை மேற்கொள்ள அந்த பகுதிகளில் விமானப்படையினர் நிலைகொண்டிருப்பது தடையாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் விமானப்படையினரை விமான நிலையங்களில் இருந்து அகற்றுவதால் விமான நிலையங்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தற்போதுள்ள பலாலி, வவுனியா, சீனக்குடா, அநுராதபுரம், ஹிங்குராங்கொட, மட்டக்களப்பு, அம்பாறை, கட்டுநாயக்க, இரத்மலானை, கொக்கல, வெலிவேரிய மற்றும் சீரிய போன்ற இடங்களில் உள்ள விமான நிலையங்கள் அமைந்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdfx5.html
சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகளை அகற்றாது போனால் தற்கொலை செய்வோம்! சிஹல ராவய எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 01:58.55 AM GMT ]
சிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த சட்டவிரோத குடியேற்றக்காரர்களை முன்னைய அரசாங்கம் அகற்றியிருந்தது. எனினும் தற்போதைய அரசாங்கம் மீண்டும் அவர்களை குடியேற அனுமதித்திருக்கிறது.
இந்தநிலையில் இன்னும் ஒரு வாரத்துக்குள் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். இல்லையேல் பிரச்சினையை தமது கைக்குள் கொண்டு வரப்போவதாக தேரர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்துக்குள் இருக்கும் ஜாதிக ஹெல உறுமயவும் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாக தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குருகல பகுதியில் குடியேறியுள்ள முஸ்லிம்களே சட்டவிரோத குடியேறிகள் என்று சிஹல ராவய குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdfx6.html
கொழும்பு துறைமுக திட்டம் குறித்து பிரதமரே கருத்துக் கூற முடியும்: தேசிய நிறைவேற்று சபை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 02:11.50 AM GMT ]
சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் “கொழும்பு துறைமுக நகரம்” திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே கருத்துக்கூற முடியும் என தேசிய நிறைவேற்று சபை தீர்மானம் எடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் அமைச்சர்களாக ராஜித சேனாரட்ன, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் விடுத்த முரண்பட்ட கருத்துக்களை அடுத்தே, தேசிய நிறைவேற்றுசபை பிரதம மந்திரிக்கு அந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள குழு தற்போது ஆராய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதன் அறிக்கை 45 நாட்களுக்குள் வெளியாகும். இதனையடுத்து கொழும்பு துறைமுக நகரம் திட்டம் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தெரிய வந்தால், அந்த திட்டம் ரத்துச் செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdfx7.html
பொதுமக்கள் பாதுகாப்பு ஒழுங்குகளை ரத்துச்செய்ய தீர்மானம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 02:28.59 AM GMT ]
இதன்படி குறித்த யோசனை அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்படவுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தின் தேசிய நிறைவேற்று சபைக்கும் குறித்த பொதுமக்கள் பாதுகாப்பு ஒழுங்குகள் அவசியம் இல்லை என்ற விடயம் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1947 ஆண்டில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
இதன்பின்னர் அதில் 1949, 1953, 1959, 1978, மற்றும் 1988ம் ஆண்டுக்களில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த சட்டத்தின் கீழேயே அவசரகாலச் சட்டம், ஊரடங்குச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeoy.html
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரை பதவி விலகக் கோரியமை தவறு: ரஜீவ விஜேசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 03:12.01 AM GMT ]
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் அழுத்தம் காரணமாக மானிய ஆணைக்குழுவின் தலைவர் ஷெனிகா ஹிரிம்புரேகம பதவி விலகியுள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை அவர், உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசிமின் ஊடாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பதவிவிலகுமாறு தமக்கு உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாசிம் கடிதம் அனுப்பிய நிலையிலேயே தாம் பதவி விலகியதாக ஷெனிகா தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை ராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க கண்டித்துள்ளார்.
இது முழுமையாக பிழையான விடயம் என்று தாம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளதாக விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தாம் பதவி விலகி விட்டதாக வெளியான தகவலை அவர் உறுதிப்படுத்தவில்லை.
துமிந்தவிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை விசாரணை செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 03:21.54 AM GMT ]
ஏற்கனவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வெலே சுதாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மறுபுறத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 75 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, துமிந்த சில்வா கைது செய்யப்படாமைக்கு ஆளும் கட்சியின் ஒரு தரப்பினரும் ஜே.வி.பியும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் பிரச்சினை தொடர்பில் நிறைவேற்றுசபை ஆராயவில்லை!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 03:33.04 AM GMT ]
கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய நிறைவேற்று சபை கூடியது. இதன்போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நிறைவேற்றுசபை ஏனைய விடயங்கள் குறித்து ஆராய்ந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeo3.html
Geen opmerkingen:
Een reactie posten