கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றை கனதிபண்ணி அதியுச்சமாகப் பேணும் கனடா போன்ற நாடுகளில் பல்லின ஊடகங்களைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு ஏற்படுத்தப்படும் தடைகளை வன்மையாகக் கனடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்புக் கண்டிக்கிறது
அநாமதேய மின்னஞ்சல்கள், போலியான பெயரில் சமூகவலைத் தளங்களில் பதிவுகள் போன்றவற்றின் ஊடாகவும், சிலவேளைகளில் தொலைபேசிகள் மூலமாகவும் ஒரு குறிப்பிட்ட சாரர் இவ்வகையான வன் அழுத்தங்களை ஊடகங்கள் மீது பிரயோகத்து வருகின்றனர்.
கனடாவிலுள்ள மேற்படி சிறுகுழுவால் இதர நாடுகளிலுள்ள தமிழ் ஊடகங்களிற்கும் கனடா தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கும் போது இத்தகைய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை இந்தக் குழு தமிழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை நசுக்குவதற்கு எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக முயற்சிக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறான அச்சுறுத்தல் தொடராமல் இருப்பதற்கும், தேவைப்படுமிடத்து இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊடகங்களிற்கு ஆதரவு வழங்குவதற்கும் கனடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்புத் தன்னால் இயன்றவகையில் உதவ தயாராக உள்ளது.
இது குறித்த விடயங்களில் தமிழ் ஊடகங்களிற்கு உதவவும் கனடியப் பாதுகாப்புக் கட்டமைப்பின் கவனத்திற்கு இந்த விவகாரங்களைக் கொண்டு வரவும் கனடிய பாதுகாப்புக் கட்டமைப்புக்களில் பணிபுரியும் தமிழ் பொலிசார் உதவ வேண்டும் என்ற வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம்
www.constam.ca / contact@constam.ca
flag