[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 02:19.40 PM GMT ]
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் இணைந்து இந்த கூட்டதை ஒழுங்கு செய்துள்ளனர்.
நீலப்படையணி (நில்பலகாய) என்ற பெயரில் செயற்பட்டு வந்த தமது அமைப்பு தற்போது நிதாஹஸ் தருன பெரமுன என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் இலங்கையருக்கு ஐந்தரை வருட சிறைத்தண்டனையும் அதன்பின்னர் அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அதன் பொதுச் செயலாளர் அனுரபிரிய தர்ஷன யாப்பா ஏற்கனவே கூறியுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மனசாட்சியின்படி செயற்படுமாறு கூறியுள்ளதாகவும் இதனால், தான் நுகேகொடை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதால், மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியினர் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.
நிதாஹஸ் பெரமுன என்ற பெயரில் நீலப்படையணி
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 04:46.22 PM GMT ]
இந்த படையணிக்கு தலைவராக முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச செயலாற்றி வந்தார்.
எனினும் பெயர் மாற்றப்பட்ட புதிய அணியில் அவர் எவ்வித பொறுப்புக்களையும் வகிக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த அமைப்பின் தலைவராக செயற்படவுள்ளார்.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன வீரவர்த்தன செயலாளராக கடமையாற்றவுள்ளார்.
பிரித்தானிய யுவதியை துஸ்பிரயோகம் செய்த இலங்கைத் தமிழருக்கு ஐந்தரை வருட சிறை
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 03:58.39 PM GMT ]
35வயதான தமிழரான இவர் ஸ்டேசன் ரோட், போட்ஸ்லேட் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
சில காலத்துக்கு முன்னர், இரவு கேளிக்கையகம் ஒன்றில் சந்தித்த யுவதியையே இலங்கையரான தமிழர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
அதிக மது அருந்தியமையால் குறித்த யுவதிக்கு சுயநினைவு இல்லாத நிலையிலேயே இலங்கையர் அவரை இரவு கேளிக்கையகத்துக்கு பின்னால் உள்ள தொடர்மாடிக்கு அழைத்துச்சென்று துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பாதிக்கப்பட்ட யுவதியின் உதவியுடனேயே குற்றம்புரிந்த இலங்கையர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten