தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளிக்கிறது - தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணிக்கு சுமந்திரன் அழைப்பு



மார்ச்சில் கொண்டுவரப்பட இருந்த சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தற்போது ஏமாற்றம் தான் ஆனாலும், செப்ரெம்பர் மாதம் வருமாக இருந்தால் புதிய மாற்றம் ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ் நல்லூர் செட்டித்தெரு வீதியிலுள்ள விடுதியொன்றில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புதிய அரசு அறிக்கையை பிற்போடுமாறு கோரியிருந்தது. ஆனால் நாம் கொண்டு வரப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்து செயற்பட்டோம்.
இதற்கமைய மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உட்பட பல உறுப்பு நாடுகளுக்கும் கடந்த 26 ஆம் திகதி கடிதமும் அனுப்பியிருந்தோம்.
இதன்காரணமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தீர்மானமொன்றை எடுத்திருக்கின்றது. அதாவது இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கைய எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடாது எதிர்வரும் செப்ரெம்பர் மாதமே வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நியாயம் வேண்டும். அதற்காகவே சர்வதேசத்தை நம்பியிருக்கின்றனர். இவ்வாறு நீதிக்காக காத்திருக்கின்ற மக்களுக்கு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனை விடுத்து உண்மைகளை மூடி மறைப்பதன் மூலமாக எங்கும் எப்போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
இலங்கை அரசும் பல வாக்குறுதிகளை ஐ.நாவுக்கு வழங்கியுள்ளது. அதாவது குறிப்பாக கடந்த காலங்களில் குற்றங்கள் இழைக்கப்படவில்லை.
சர்வதேச விசாரணை அவசியமில்லை என்று கூறி வந்த அரசு தற்போது அதனைப் பிற்போடுமாறு கேட்டிருப்பதானது நடந்ததை ஏற்றுக் கொண்டு அறிக்கைக்கு பயப்படுவதனையே காட்டுகின்றது. அதேநேரம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை அரசுடனும் சேர்ந்து தான் இங்கு சிலதை செய்ய வேண்டியிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் ஐ.நா. தீர்மானத்தில் ஏற்கனவே குறிப்பிட்டதன் பிரகாரம் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற அதே வேளையில், உள்ளக விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையே நாமும் கேட்டிருக்கின்றோமே தவிர இலங்கையின் உள்ளக விசாரணையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் ஆட்சி மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள, மாறுபட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலை மற்றும் இலங்கை அரசின் உத்தரவாதத்திற்கமைய பிற்போட்டிருக்கின்றது. இத்தகைய செயற்பாடு எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் நன்மைகளும் பல இருக்கின்றது.
இவ்வாறான நிலையிலையே இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளிம் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
இதன் போது மேற்படி அறிக்கையை மார்ச்சில் கொண்டு வராமல் செப்ரெம்பருக்கு கொண்டு வரும் வகையில் பிற்போடுமாறு கோரி குறிப்பாக மனித உரிமைகள் ஆனையாளருக்கு எழுத்து மூலமான உத்தரவாதமொன்றையும் வழங்கியிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் ஐ.நா விசாரணைகளின் போது சாட்சியம் அளிப்பதற்கும் சாட்சியங்களை இரகசியமாக வழங்குவதற்கும் பலரும் அஞ்சி நடுங்கினர். அதனால் குறைந்தளவிலான சாட்சியங்களே வழங்கப்பட்டது. ஆனால் இங்கு அளவுக்கு அதிகமான சாட்சியங்கள் இருக்கின்றன. ஆகவே இனிமேல் அச்சமின்றி சாட்சியங்களை வழங்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.
இடைப்பட்ட இக்காலப்பகுதியில் நாம் வழங்குகின்ற சாட்சியங்கள் மார்ச் மாதம் கொண்டு வரப்பட இருந்த அறிக்கையை விடவும் செப்ரெம்பரில் கொண்டு வரப்படுகின்ற அறிக்கையானது, மிகப் பலம் வாய்ந்ததும் உறுதியானதும் நிறைவேற்றக் கூடியதுமானதாக அமையுமென்று எதிர்பார்க்கின்றோம்.
தற்போது ஏமாற்றமாக இருந்தாலும் செப்ரெம்பர் மாதம் பார்க்கும் போது புதிய ஒளிக்கீற்றாகவும் எமக்கு நம்மையாகவுமே அமையுமென்றும் குறிப்பிட்டார்.
கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனிக்கு தமிழ் மக்களின் ஒரே சக்தியாக விளங்குவதற்கு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ் நல்லூரிலுள்ள விடுதியொன்றில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாம் ஒன்றிணைவதன் மூலம் எம்முடைய பலம் மேலும் அதிகரித்து சர்வதேச ரீதியில் எமது பிரச்சினையை கையாள முடியும்.
பிரிந்திருந்தால் அப்பிரிவைப் பயன்படுத்தி வேறு சிலர் அரசியலில் இலாபம் ஈட்டக் கூடும். எனவே இணைந்து செயற்படுங்கள் என்றார்.
மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றது. இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனியும் ஏற்றுக் கொண்டு கூட்டமைப்போடு இணைவதற்கு முன்வர வேண்டும்.
இதேநேரம் வடக்கு மாகாண சபையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தின் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் என்று தமிழ்த் தேசிய மக்கள முன்ணனியின் தலைவர் கNஐந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணிக்கு சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno6H.html

Geen opmerkingen:

Een reactie posten