தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

அமெரிக்காவில் வீதி ஒன்றுக்கு இலங்கையர் பெயர்!

அமெரிக்காவில் உள்ள  வீதி ஒன்றுக்கு இலங்கையர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வீதியொன்றுக்கு கல்யாண ரணசிங்க எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இலங்கையரே இந்த கல்யாண ரணசிங்க ஆவார்.
ஓராண்டு காலத்திற்கு முன்னதாக கல்யாண ரணசிங்க திடீர் விபத்தொன்றில் உயிரிழந்தார்.
குறித்த வீதிக்கு கல்யாண ரணசிங்க என பெயரிடப்பட்டுள்ளதாக குறி;த்த நகரின் மேயர் பில் டி பிலேசியோ,  ரணசிங்கவின் மனைவி தம்மிக்கா கன்னங்கர மற்றும் மகள் திமுது ரணசிங்க ஆகியோரிடம் அறிவி;த்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்த இலங்கையர் ஒருவரின் பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட முதலாவது வீதி இதுவென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgp4.html


Geen opmerkingen:

Een reactie posten