தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 februari 2015

இத்தாலியிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் மீது விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினர் தாக்குதல்

பயணிகள் விமானத்தில் பயணமானார் மைத்திரிபால
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 10:11.28 PM GMT ]
நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு பயணமானார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeu1.html

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 11:37.02 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் வேளையில், திரும்புவர்கள் மீள்குடியேறுவதற்கான நிலங்கள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களின் சில நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, இந்தியாவிலிருந்து வருபவர்களின் மீள்குடியேற்றம் எந்த அளவுக்கு சாத்தியமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார். 
இராணுவத்தின் பிடியில் இருக்கும் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேறுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தால் அது மிகவும் வரவேற்கத் தக்கதாக அமையும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
புதிய ஜனாதிபதியுடன் தாங்கள் பல முறை பேசியுள்ளதாகவும், அவர் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முழுமையாக அறிந்துள்ளார் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவ்வாறே, இந்தியாவுக்கும் மக்களின் மீள்குடியேற்றம், காணாமல் போனவர்கள் குறித்த விபரங்கள் இல்லாமை, விசாரணைகள் ஏதுமின்றி, ஆண்டுகள் கணக்கில் சிறையிலுள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் போன்றவை முழுமையாகத் தெரியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.
இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின் போது உறுதியான தீர்வுகள் எட்டப்படும் வகையில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பாக்கிறது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeu2.html

தமது பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளவே ராஜபக்ச குடும்பம் செயற்பட்டது! காலியில் பிரதமர் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 11:52.30 PM GMT ]
கடற்கரைகளுக்கு அருகாமையில் வானுயர்ந்த ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்க இனிமேல் அனுமதி வழங்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காலி பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த பிரதமர் காலி மாவட்ட ஐ. தே. க. ஆதரவாளர்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பு காலி ஐ. தே. க. பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது.
தென்பகுதி சுற்றுலா வளர்ச்சி குறித்தும் புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் பிரதமர் இங்கு கருத்துத் தெரிவித்ததார்.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் 3 பிரதான திட்டங்கள் உள்ளன.
மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்,
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துதல்,
கடந்த கால மோசடிகள் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குதல் என்பனவே அவையாகும்.
அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஏனைய கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து பாரிய சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் கம்பனிகளுடன் பேசி பயனில்லை.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தி மக்களின் வருமானத்தை அதிகரிப்பது குறித்து சிந்திக்காமல் தமது பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளவே ராஜபக்ச குடும்பம் செயற்பட்டது.
தெற்கிலுள்ள கடற்கரைகளை பாதுகாக்க வேண்டும். புதிய சுற்றுலா ஹோட்டல்கள் அமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.
அழகான பல கடற்கரைகள் நாசமடைந்துள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும். என்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeu3.html


இத்தாலியிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் மீது விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினர் தாக்குதல்
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 12:18.14 AM GMT ]
கடந்த வாரம் இத்தாலியில் இருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினரால் தாக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையர்களை நாடு கடத்தும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாட்டுக்கு திரும்பிச்செல்வோர் மற்றும் நாடு கடத்தப்படுவோர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரைவதைக்குட்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இத்தாலி அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்ட 6 பேர் விமான நிலையத்தில் வைத்து புலனாய்வு பிரிவினரால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புத்தூர், சிறுப்பிட்டியை சேர்ந்த 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனையவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் புதிய ஆட்சிக்குப்பின் அமைதி நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில், விமான நிலையத்தில் வெளிநாடு செல்பவர்களும் இலங்கை வருபவர்களும் கைது செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் இருந்து விருப்பத்தின் பேரில் சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டு பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சர்வதேச நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுத்து சர்வதேச நாடுகள் இலங்கைக்கு நாடுகடத்தலை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSaKdeu4.html

Geen opmerkingen:

Een reactie posten