[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 02:24.45 PM GMT ]
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவன் கிருஸ்ணன்- றீகன், கோப்பாய் - கைதடி வீதியில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களிள் விபத்தில் சிக்கி மரணமடைந்தமையால் கலாசாலையே சோகமயமாகக் காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து அவரது இறுதிக் கிரியைகள் கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
அவரது அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் வீ.கருணைலிங்கம், விரிவுரையாளர்கள், கைதடி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் உட்பட்டோர் அஞ்சலி உரைகளை ஆற்றியிருந்தார்கள்.
இதில் கலாசாலையின் அனைத்து ஆசிரிய மாணவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.
நேற்றைய தினம், கலாசாலையில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. கலாசாலையின் ரதிலக்ஸ்மி மண்டபத்தில் நேற்று மாலை 4.00 மணியளவில் ஆசிரிய மாணவன் றீகனின் உடல் வைக்கப்பட்டு அஞசலிக்கூட்டம் இடம்பெற்றது.
இதில் கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம், முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை, பிரதி அதிபர் ச.லலீசன், விரிவுரையாளர் கழக உபதலைவர் அ.பௌநந்தி, மாணவர் மன்றத் தலைவர் ம.சயந்தரூபன், யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் விரிவுரையாளர் ம.இளம்பிறையன், உடற்கல்வி டிப்புளோமா ஆசிரியர் சங்கத் தலைவர் தர்மரூபன், அருட்பணி அகஸ்ரீன் அடிகளார் ஆகியோர் அஞ்சலி செலுத்தி உரைகளை ஆற்றினர்.
உயிரிழந்த ஆசிரிய மாணவனுக்கு கலாசாலைக் கொடி போர்த்தப்பட்டு வைக்கப்பட்ட பூதவுடலுக்கு விரிவுரையாளர்களும் ஆசிரிய பயிலுநர்களும் அயலவர்களும் எனப் பலநூற்றுக்கணக்கானோர் கண்களில் நீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfp1.html
யாழ்.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்!
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 04:04.19 PM GMT ]
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அச்சுவேலியை சேர்ந்த நடராசா தர்ஷன் என்ற இளைஞர் யாழ்.நகரப் பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த இளைஞர் அங்கிருந்த, எரிபொருள் போத்தலை எடுத்து அதனுள் இருந்த டீசலை குடித்துள்ளார்.
இதன்பின்னர் குறித்த இளைஞனை யாழ்.போதனா வைத்தியசாலையில் பொலிஸார் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.
இதன்போது குறித்த இளைஞர் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் காவலுக்கு இருந்து பொலிஸாரையும் தாண்டி தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிஸ் இரகசிய பிரிவினர் விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தொடங்கியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfp4.html
வடமாகாண சபையின் தமிழின அழிப்பு பற்றிய தீர்மானம் ஒரு வரலாற்று திருப்பம்: கனடிய தமிழர் தேசிய அவை
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 04:08.09 PM GMT ]
இது தொடர்பாக கனடிய தமிழர் தேசிய அவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி உலகத் தமிழ் மக்கள் சமூகம் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி முனைப்பான போராட்டங்களை முன்னகர்த்தி வரும் வீச்சு பெற்ற இந்நாட்களில் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை இந்த தீர்மானத்தை எடுத்து இருப்பதானது நிலமும் புலமும் ஒன்றாக நின்று எம் மக்களுக்கான நீதிக்காக போராடும் வலுவைப் பெற்றிருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.
இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்தேறி 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் உலகம் அதனை இனப்படுகொலை என உச்சரிக்க தயங்கும் காலங்களை மாற்றும் வகையில் இந்த நல்ல செய்தி உலகுக்கு ஒரு வலிமையான செய்தியை கூறும் என கனடிய தமிழர் தேசிய அவை உறுதியாக நம்புகின்றது.
கனடாவில் மார்க்கம் நகரில் உலகில் முதன் முதலாக எங்கள் மண்ணில் நடைபெற்றது இனப்படுகொலை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதே போல் இத்தாலியில் பலர்மோ மாநகரசபையிலும் தமிழக சட்ட சபையிலும் தமிழின அழிப்பு வலியுறுத்தப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
இப்பொழுது இனப்படுகொலையான மண்ணின் மக்கள் சமூகத்தால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை அதனது காலக் கடமையை சரியாக செய்துள்ளமை எம் இனத்தின் மக்கள் போராட்டம் வலுப்பெற வாய்ப்பளித்துள்ளது.
தொடர்ந்தும் நிலமும் புலமும் உலக மாந்த நேயமும் நீதி வேண்டிய போராட்டத்தில் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் என்ற நம்பிக்கை எமக்குள் வலிமையாக எழுந்துள்ளது என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfp5.html
Geen opmerkingen:
Een reactie posten