[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:36.08 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்திய மீனவர்களின் வடக்கு கடல் அத்துமீறல்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 15ஆம் திகதியன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
வடக்கு கடலில் பல்வேறு தடவைகளாக இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் இடம்பெற்றன. இதனை தடுக்க இரண்டு கட்ட பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் அதில் இணக்கங்கள் காணப்படவில்லை.
இந்தநிலையில் இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை ஒன்றை தாம் முன்வைத்தாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
பசில் ராஜபக்சவை விசாரிக்க இன்டர்போலை நாடவுள்ளது அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 04:45.11 PM GMT ]
இலங்கை அரசாங்க பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இது தொடர்பில் சிக்வா செய்திசேவைக்கு தகவல் அளிக்கையில்,
பசில் ராஜபக்சவை விசாரணை செய்ய சர்வதேச இன்டர்போலின் உதவி கோரப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பசில் ராஜபக்ச மனைவியுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று வி;ட்டார்.
இந்தநிலையில் அவர் மீதும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மீதும் ஜே வி பி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிடமும் முறையிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfp6.html
Geen opmerkingen:
Een reactie posten