தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம்! சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா

மட்டக்களப்பில் தீக்கிரையாகி இளம்பெண் ஒருவர் பலி
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 03:06.17 PM GMT ]
மட்டக்களப்பில் இளம்பெண் ஒருவர் தீக்கிரையாகி பலியான சம்பவமொன்று இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்;டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மாவிலங்கத்துறையிலிருந்து தீப்பற்றி எரிந்த நிலையில் எடுத்து வரப்பட்ட குறித்த இளம் பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஆரையம்பதி மாவிலங்கத்துறையைச் சேர்ந்த 27 வயதுடைய வை. ஜீவராகினி என்ற திருமணமான  இளம்பெண்ணே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். 
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfp3.html

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம்! சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 02:40.56 PM GMT ]
எமது நாட்டு இராணுவம் தொடர்பிலும்,  அரசியல் தலைவர்கள் தொடர்பிலும் உள்ள முறைப்பாடுகளை விசாரிக்க சர்வதேச நீதிமன்றமொன்றை நாடிச் செல்லத் தேவையில்லை. எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம் என வெளிவிவகார பிரதியமைச்சர் சட்டத்தரணி அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரச்சினைகளை இலங்கைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். எமது பிரச்சினையை சர்வதேசத்துக்கு கொடுக்க மாட்டோம் எனும் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.
எமக்கு நம்பிக்கையான நீதிமன்ற ஒழுங்கொன்று உள்ளது. அதில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை சரிசெய்துகொண்டு எமது பிரச்சினைக்கு தீர்வு தேடிக்கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
அதேவேளை, வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் செல்வாக்கு செலுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு தனது விசாரணைகளை ஏற்கனவே பூர்த்திசெய்து விட்டது. அதன் காரணமாக வடமாகாணசபையின் தீர்மானம் அதில் தாக்கம் செலுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை பிரேரணைகளை நிறைவேற்றலாம். எனினும் இந்த விவகாரம் ஏற்கனவே சர்வதேச ரீதியில் ஆராயப்படுவதால் நாங்கள் இது குறித்து கரிசனை கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfp2.html

Geen opmerkingen:

Een reactie posten