[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 05:31.32 AM GMT ]
இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதிலொரு யானைக்குட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்று, கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால், கோத்தபாய மீள ஒப்படைத்ததாக பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
சரித்த, சாரிகா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet7.html
50 பில்லியன் ரூபாவினை வீண் விரயம் செய்த பெருந்தெருக்கள் அமைச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 05:47.04 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் இயங்கி வந்த பெருந்தெருக்கள் அமைச்சினால் சுமார் 50 பில்லியன் ரூபாய்கள் வீண் விரயம் செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் பார்க்க, மேலதிகமாக 50 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதில் பெருமளவுத்தொகை பணம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை பெருந்தெருக்கள் அமைச்சினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகளில் 70 வீதமானவை தேவையற்ற செலவுகள் என்று அமைச்சர் கபீர் காசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது பொய்யான செலவுக்கணக்குகள் காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மொரட்டுவை பல்கலைக்கழக நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceuy.html
இலங்கையில் இயங்கி வந்த தனியார் இராணுவப்பிரிவுகள் குறித்த விசாரிக்குமாறு பிரதமர் உத்தரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 05:07.02 AM GMT ]
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேரத்னவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவின் ஆட்சியின் போது அரசாங்கத்தின் ஆதரவுடன் வரையறுக்கப்பட்ட ரக்சன ஆரக்சக்க நிறுவனம், எவான்ட் காட் ஆகிய தனியார் இராணுவப்பிரிவுகள் இயங்கி வந்தன.
இது தொடர்பில் இந்திய செய்தியாளர்கள், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேரத்னவிடம் வினவியபோது, தாம் இது குறித்து ரக்சன ஆரக்சக்க நிறுவன பணிப்பாளரிடம் கேட்டபோது அவர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்தார்.
அதேநேரம் எவன்ட் காட் என்ற நிறுவனம் கடல் பாதுகாப்பு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் நிரப்புவதற்காக காலி துறைமுகத்துக்கு வந்தபோதே அதில் ஆயுதங்கள் இருந்தமை கடந்த வாரத்தில் கண்டறியப்பட்டது. இதன்போது கடற்படையினரும் அந்த நிறுவனத்தின் கப்பலில் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த இரண்டு தனியார் பாதுகாப்பு இராணுவப்படைகளுக்கும் கடந்த ஆட்சியின் போது எந்தளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து கணக்காய்வுகள் நடத்தப்படுவதாக விஜேரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை எவான்ட் காட் நிறுவனத்தின் கப்பலில் இருந்து காலிதுறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் இருந்ததாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில் ரக்சன ஆரக்சக்க என்ற நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட இளைப்பாறிய மேஜர் ஜெனரல் தர அதிகாரி பாலித பெர்ணான்டோவை குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்ய முடியாமல் உள்ளனர்.
இதற்கு காரணம், அவர் தமது பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு அப்பால் இந்த இரண்டு தனியார் இராணுவப்பிரிவுகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா மாகாணசபை தேர்தலின் போதும் இந்த இராணுவப்பிரிவுகள் முன்னைய அரசாங்கத்துக்காக பிரசாரங்களில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இந்த இராணுவப்பிரிவுகள் யாவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஏற்பாட்டிலேயே இயங்கி வந்துள்ளன.
இந்த தனியார் இராணுவப்பிரிவுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஆயுதங்கள், குறிப்பாக டி56 துப்பாக்கிகள், நைட்விசன் கருவிகள் உட்பட்ட பல முக்கிய ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet5.html
Geen opmerkingen:
Een reactie posten