தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

அரசியல் கைதிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் கூட்டமைப்பு!

காலி - கொழும்பு வாகன விபத்தில் ஒருவர் பலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 05:16.15 AM GMT ]
காலி - கொழும்பு பிரதான வீதியின் இந்துருவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த வேனுடன் மோதியதனாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இந்துருவ பிரதேசத்தை சேர்ந்தவராகும் இவருக்கு வயது 38.
 விபத்து தொடர்பாக வேன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர் அவர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet6.html
இரண்டு யானைக்குட்டிளை மீள ஒப்படைத்த கோத்தபாய
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 05:31.32 AM GMT ]
சட்ட ரீதியாக வைத்திருந்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ஷ மீள ஒப்படைத்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதிலொரு யானைக்குட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பெற்று, கோத்தபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால், கோத்தபாய மீள ஒப்படைத்ததாக பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
சரித்த, சாரிகா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார். 
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet7.html
50 பில்லியன் ரூபாவினை வீண் விரயம் செய்த பெருந்தெருக்கள் அமைச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 05:47.04 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் இயங்கி வந்த பெருந்தெருக்கள் அமைச்சினால் சுமார் 50 பில்லியன் ரூபாய்கள் வீண் விரயம் செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலும் பார்க்க, மேலதிகமாக 50 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதில் பெருமளவுத்தொகை பணம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை பெருந்தெருக்கள் அமைச்சினால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகளில் 70 வீதமானவை தேவையற்ற செலவுகள் என்று அமைச்சர் கபீர் காசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது பொய்யான செலவுக்கணக்குகள் காட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மொரட்டுவை பல்கலைக்கழக நிபுணர்களின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceuy.html
இன்று முதல் புதிய பஸ் கட்டணம் அமுலில்!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 05:55.58 AM GMT ]
எரிபொருள் விலை குறைப்புக்கு அமைய புதிய பஸ் கட்டண நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதற்கமைய தனியார் மற்றும் அரசாங்க பஸ்களில் 8 முதல் 10 சதவீதம் வரை பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 9 ரூபாய் கட்டணங்கள் 8 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
13 ரூபாவாயின் 12 ரூபாவாகவும், 17 ரூபாவாயின் 15 ரூபாவாகவும் பஸ் கட்டணங்கள் குறைவடைந்துள்ளன.
மேலும் 20 முதல் 34 ரூபா வரை முன்னர் இருந்த கட்டணம் 3 ரூபாவாலும், 37 முதல் 59 வரை முன்னர் இருந்த கட்டணம் 4 ரூபாவாலும் குறைவடைந்துள்ளன.
இதேவேளை முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பாடசாலை வேன்களுக்கான கட்டணங்களும் இன்று முதல் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceuz.html
அரசியல் கைதிகளை விடுவிக்க அமெரிக்காவின் உதவியை நாடும் கூட்டமைப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 06:06.01 AM GMT ]
இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை கோரவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலர் நிஸா பிஸ்வாலிடம் இந்தக்கோரிக்கையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன்வைக்கவுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வரும் அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியாக பிஸ்வால் கருதப்படுகிறார்.
இந்தநிலையில் அவருடன் இனப்பிரச்சினை தீர்வு உட்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்தும் பேசப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு ஒன்றை நிஸா பிஸ்வால் மேற்கொள்வார் என்று இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKceu0.html

Geen opmerkingen:

Een reactie posten