[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 02:56.45 AM GMT ]
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கம், மக்களுக்காக ஒரு சதவீத வரவு செலவு திட்டத்தையே முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருட்டு, மோசடி அற்ற போட்டி பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப, அனைவருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKces7.html
பிரதம நீதியரசரின் பதவி நீக்கம் குறித்து விவாதம் நடத்த சந்தர்ப்பம் வழங்கப்படும்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 03:03.37 AM GMT ]
புதிய பிரதம நீதியரசர் நியமனம், முன்னாள் பிரதம நீதியரசர் பணி நீக்கம் என்பன தொடர்பில் எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு இடமளிக்க இணங்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். இதற்காக விசேட பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும்.
பாரபட்சமின்றி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவர்.
குற்றம் இழைத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களா அல்லது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களா என கவனிக்கப்பட மாட்டாது.
குற்றச் செயல்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேரடி நேர்காணல் ஒன்றில் நேற்று பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcety.html
ஐ.தே.க தலைவர்களின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் திட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 04:06.10 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியினர் எம்மை விளையாட்டுப் பொருளாக நினைத்து செயற்பட்டு வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எங்கள் அனைவரையும் கள்வர்ளாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சித்தரிக்கின்றனர். எமக்கு எதிராக கடுமையான சேறு பூசல்கள் இடம்பெற்று வருகின்றன.
நாமும் அவர்களின் பைல்களை எடுத்துக் கொண்டு கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவிற்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டுமென டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சந்தித்து பேசிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நீங்கள் என்ன தூங்குகின்றீர்களா அவற்றை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதற்காகத்தான் தேசிய நிறைவேற்றுப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet2.html
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி ஒன்று பொலிசாரால் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 04:35.30 AM GMT ]
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானதென சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு ஜீப் வண்டி ஹலாவத்தை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகனம் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த நிலையில், ஜீப் வண்டி பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
நேற்றிரவு மீட்கப்பட்ட இந்த ஜீப் வண்டி லேண்ட் ரோவர் ரக வண்டி எனவும் இலக்கம் 32-5262 என குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹலாவத்தை ஆரியகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் குறித்த ஜீப் வண்டியை வாகனம் பழுது பார்க்கும் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை ஹலாவத்தை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet4.html
இலங்கையில் இயங்கி வந்த தனியார் இராணுவப்பிரிவுகள் குறித்த விசாரிக்குமாறு பிரதமர் உத்தரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 05:07.02 AM GMT ]
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேரத்னவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவின் ஆட்சியின் போது அரசாங்கத்தின் ஆதரவுடன் வரையறுக்கப்பட்ட ரக்சன ஆரக்சக்க நிறுவனம், எவான்ட் காட் ஆகிய தனியார் இராணுவப்பிரிவுகள் இயங்கி வந்தன.
இது தொடர்பில் இந்திய செய்தியாளர்கள், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேரத்னவிடம் வினவியபோது, தாம் இது குறித்து ரக்சன ஆரக்சக்க நிறுவன பணிப்பாளரிடம் கேட்டபோது அவர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக தெரிவித்தார்.
அதேநேரம் எவன்ட் காட் என்ற நிறுவனம் கடல் பாதுகாப்பு கடமைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் நிரப்புவதற்காக காலி துறைமுகத்துக்கு வந்தபோதே அதில் ஆயுதங்கள் இருந்தமை கடந்த வாரத்தில் கண்டறியப்பட்டது. இதன்போது கடற்படையினரும் அந்த நிறுவனத்தின் கப்பலில் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த இரண்டு தனியார் பாதுகாப்பு இராணுவப்படைகளுக்கும் கடந்த ஆட்சியின் போது எந்தளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து கணக்காய்வுகள் நடத்தப்படுவதாக விஜேரத்ன குறிப்பிட்டார்.
இதேவேளை எவான்ட் காட் நிறுவனத்தின் கப்பலில் இருந்து காலிதுறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் இருந்ததாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில் ரக்சன ஆரக்சக்க என்ற நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட இளைப்பாறிய மேஜர் ஜெனரல் தர அதிகாரி பாலித பெர்ணான்டோவை குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை செய்ய முடியாமல் உள்ளனர்.
இதற்கு காரணம், அவர் தமது பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு அப்பால் இந்த இரண்டு தனியார் இராணுவப்பிரிவுகளும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா மாகாணசபை தேர்தலின் போதும் இந்த இராணுவப்பிரிவுகள் முன்னைய அரசாங்கத்துக்காக பிரசாரங்களில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இந்த இராணுவப்பிரிவுகள் யாவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஏற்பாட்டிலேயே இயங்கி வந்துள்ளன.
இந்த தனியார் இராணுவப்பிரிவுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஆயுதங்கள், குறிப்பாக டி56 துப்பாக்கிகள், நைட்விசன் கருவிகள் உட்பட்ட பல முக்கிய ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcet5.html
Geen opmerkingen:
Een reactie posten