தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

இவரை கண்டால் உடன் தகவல் தரவும்: பெண்களை ஏமாற்றி இன்ரர் நெட்டில் விற்கும் !

யோசித ராஜபக்ஷவின் கம்பெனிக்கு முதலிடம்: ஆட்சி மாறினாலும் நடப்பது தான் நடக்கிறது ?

[ Feb 16, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 22210 ]
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் , இலங்கை வங்கியின் பிரச்சார மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒரு தனியார் நிறுவனத்திடம்தான் பொறுப்பை ஒப்படைத்தார்கள். இந்த நிறுவனத்தின் பெயர் "மெஜண்டா" ஆகும். இதனை யோசித ராஜபக்ஷவே நடத்தி வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இலங்கை வங்கியால் வீட்டுக் கடன் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாறி இருந்தாலும் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்க இந்த யோசித ராஜபக்ஷவின் கம்பெனிக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இதுபோன்ற பல கம்பெனிகள் இருக்கிறது. ஆனால் அதனை எல்லாம் புறந்தள்ளி , யோசித ராஜபக்ஷவின் கம்பெனிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது பலரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
எதிரணியில் உள்ள மைத்திரி மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் மகிந்த ராஜபக்ஷவை பழிவாங்க முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் ரணில் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பாராளுமன்றில் ரணிலுக்கு தற்போது பெரும்பாண்மை இல்லை என்ற காரணத்தால் தான் அவர் சற்று நெளிவு சுளிவோடு நடந்துவருகிறார் என்று கூறப்படுகிறது. 

பாதுகாப்பு அமைச்சரின் பியூசைப் பிடுங்கியுள்ளார் மைத்திரி பால சிறிசேன ?

[ Feb 17, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 1250 ]
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழுள்ள விடயதானங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் கீழுள்ள விடயதானங்கள் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த11ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்பிரகாரம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருக்கும் அவரிடம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள முக்கியத்துவமற்ற நான்கு துறைகளை மேற்பார்வை செய்யும், கண்காணிக்கும் பொறுப்புகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரி, ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, தேசிய கடெற் படையணி ஆகிய துறைகளை மேற்பார்வையிடும் பொறுப்புகள் மட்டுமே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன வெளியிட்ட கருத்துக்கள்தொடர்பில் குறிப்பாக வடக்கு விஜயத்தின் பொது அவர் விடுத்த அறிக்கைகள் தொடர்பில் பலத்த விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பாதுகாப்பு அமைச்சு குறித்த முக்கிய விடயங்களை தனது கட்டுப்பாட்டுள் வைத்திருப்பதற்கான இறுக்கமான முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது

இலங்கை இந்தியாவுக்கு இடையே அணுத் திட்ட ஒப்பந்தம்- சீனா காலியாகும் நிலை !

[ Feb 17, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 630 ]
இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்று டெல்லியில் இலங்கை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று முன் தினம் மாலை டெல்லி சென்றார். நேற்று (16) அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி சிறிசேன ஏற்றுக் கொண்டார். பின்னர், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிறிசேன தனது மனைவி ஜெயந்தியுடன் மலரஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அணு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், மோடியும், சிறிசேனவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "இந்தியாவுக்கும் - இலங்கைக்குகும் இடையே வலுவான பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னே எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவை நோக்கி அமைந்தது. இந்தப் பயணத்தின்மூலம் இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். பல்வேறு ஒப்பந்தங்களில் இன்று இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர், எங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும்" என்றார்.
முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா - இலங்கை நட்புறவு புதிய பரிமாணங்களை எட்டும் தருணம் வந்துவிட்டது. இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்னை அவர்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக வரும் மார்ச் மாதம் அவர்கள் நாட்டுக்குச் செல்வேன். மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நானும், சிறிசேனவும் முனைப்புடன் இருக்கிறோம். இந்தியா - இலங்கை பரஸ்பரம் நம்பிக்கைக்கு, இப்போது கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு சான்றாகும். மகிந்த ராஜபக்ஷ இலங்கையில் அதிகாரத்தில் இருந்தவேளை அணு உலைகளை அமைப்பது தொடர்பாக அவர் சீனாவிடம் உதவிகளைப் பெற இருந்தார். ஆனால் அவை அனைத்தும் கை மாறிப்போய்விட்டது.

http://www.athirvu.com/newsdetail/2305.html

இவரை கண்டால் உடன் தகவல் தரவும்: பெண்களை ஏமாற்றி இன்ரர் நெட்டில் விற்கும் !

[ Feb 17, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 2245 ]
படத்தில் இருப்பவரை கண்டால் உடனடியாக பொலிஸூக்கு அறிவிக்குமாறு ,பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இணையத்தளங்களின் ஊடாக பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் தேடப்பட்டுவருகின்றார். குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த சந்தேகநபரை கைதுசெய்துசெய்வதற்கு தேடிவருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், அதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளனர்.
சுஜித் நிலந்த என்ற இந்த சந்தேகநபர் வதிவிடத்திலிருந்து தப்பியோடியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலக்கம்161/12, பன்சலவத்தை, களுகல்பிட்டிய, ஸ்பிரிங்வெலிவீதி, பதுளை என்ற முகவரியிலேயே இவர் வசித்துள்ளார். சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 011-2422176 அல்லது 011-2326979 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2306.html

Geen opmerkingen:

Een reactie posten