தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

2ஆம் இணைப்பு:- இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒத்திவைக்கப்படும் என தெரிவிப்பு !

புலம்பெயர் தமிழர்கள் எதனை நினைத்துப் பயந்தார்களோ , அது நடைபெற ஆரம்பித்துவிட்டது. தற்போது கிடைக்கும் செய்திகளுக்கு அமைவாக ஐ.நா இலங்கைக்கு எதிராக கொண்டுவர இருந்த தீர்மானத்தை செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளது என அறியப்படுகிறது.
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்த யுத்த குற்றவிசாரணை அறிக்கையை வெளியிடுவதை தாமதிக்க வேண்டுமென்ற இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு மனித உரிமை ஆணையாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாக "ரொய்ட்டர்" செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதமொன்று தனக்கு கிடைத்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணையாளர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட விசாரணை அறிக்கை வெளியாவதை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வு வரை பிற்போடவேண்டும் என தான் கருதுவதாக மனித உரிமைஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வரலாறு காணாத நிகழ்வு ஒன்றும் புலம்பெயர் நாடுகளில் நடந்துள்ளது. அது என்னவென்றால் உலகில் உள்ள பல நாடுகளில் இயங்கிவரும் பல கட்டமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். கனடா , அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே என்று பல நாடுகளில் உள்ள , தமிழ் அமைப்புகள் முதன் முறையாக ஒன்றாக இணைந்து ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். இதன் பிரதி உத்தியோக பூர்வமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இதில் எக் காரணத்தைக் கொண்டும் , ஐ.நா தனது விசாரணைகளை தள்ளிவைக்க கூடாது என்று சகல தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை சர்வதேசம் எந்த அளவு ஏற்றுகொள்ளும் என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது நகர்த்தப்படும் காய் நகர்த்தல் மிகவும் சாதூரியமான விதத்தில் உள்ளது.

முழு கடிதத்தையும் வாசிக்க இங்கே அழுத்தவும்:
முழு கடிதத்தையும் வாசிக்க இங்கே அழுத்தவும்:

Geen opmerkingen:

Een reactie posten