தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 februari 2015

வடக்கில் 20 ஆயிரம் பேர் போரினால் நிரந்தர காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்: வட மாகாண முதல்வர்

வடமாகாணத்தில் மாத்திரம் கணவன்மாரை இழந்த சுமார் ஒரு லட்சம் பெண்கள் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற வடமாகாணத்தின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்கூட்டத்துக்கு பொது நிர்வாக அமைச்சர் கரு ஜெயசூரிய தலைமை தாங்கினார்.
இதன்போது கருத்துரைத்த விக்னேஸ்வரன், போரினால் நிரந்தர காயங்களுக்கு உள்ளான 20000 பேர் வரை வடமாகாணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் போரினால் பல சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் இந்த விடயங்களை கவனிக்காமல் இருந்து விட்டது என்றும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஆளுநர் சந்திரசிறி தமது தனி ஆட்சியை வடக்கில் மேற்கொண்டு வந்தார்.
இதன்போது அவர் தமக்கு தேவையான அதிகாரிகளை கொண்டு செயலாற்றி வந்தார் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் 13வது அரசியலமைப்பின் கீழ் வடமாகாணத்துக்கான ஆட்சியை மாகாணசபைக்கு கையளிக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன், கருஜெயசூரியவிடம் கோரிக்கை விடுத்தார்.
தொடர்புபட்ட செய்தி

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயார்: கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜனாதிபதி பிரசாரம் செய்யமாட்டார்: லக்ஸ்மன் கிரியெல்ல நம்பிக்கை

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்ட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த எதிர்ப்பார்ப்பை இன்று வெளியிட்டார்.
மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் என்ற போதிலும் அவரின் வெற்றியை ஐக்கிய தேசியக்கட்சி உறுதிப்படுத்தியது என்றும் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு நடைமுறை அரசாங்கத்தை மைத்திரிபால சிறிசேன தோற்கடிப்பார் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அது நடக்காது என்று தாம் நம்புவதாக கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten