காதல்… மாணவனுடன் ஆற்றில் குதித்த மாணவியின் சடலமும் மீட்கப்பட்டது
February 13, 201511:06 am
தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவியின் சடலத்தை கடற்படையினர் இன்று காலை மீட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை தெதுறுஓயா நீர்த்தேக்கத்தில் மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் குதித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகலையடுத்தே பொலிஸாரும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து நேற்று காலை குறித்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளதுடன்,பெற்றோர் அவர்களை கண்டித்தமையினால் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவனின் உடல் நேற்று மீட்கபட்ட போது..
http://www.jvpnews.com/srilanka/97400.html
பான் கீ மூன் நிலைப்பாட்டில் மாற்றமில்லை
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்க உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டிய அவசியம் வெகுவாக எழுந்துள்ளது என அவர் கருதுவதாக பான் கீ மூனின் பேச்சாளர், ஸ்டீவன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கம் உள்ளகப் பொறிமுறைமை ஒன்றின் மூலம் மீள் விசாரணைகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச தர நிர்ணயங்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த முறையில் நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டியது இலங்கையின் முக்கிய கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் போன்றே யுத்தத்தின் பின்னர் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் பொறுப்பு கூறல்களின் ஊடாக நிலையான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் பூரண ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/97406.html
இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச்சில் வெளியாகாது!
குறித்த அறிக்கையை எப்போது வெளியிடுவது என்ற முடிவை எடுப்பது ஐ.நாவின் மனித உரிமைகள் ஆனணயாளர் மற்றும் மனித உரிமை கவுன்ஸிலின் தலைவரே. எனினும் மார்ச் மாத அமர்வில் அறிக்கை வெளியாகாது என்பது குறித்து தான் நம்பிக்கை கொண்டிருக்கிறார் என அவர் தெரிவித்தார்.
மார்ச் 25 ஆம் திகதி வெளியாகவுள்ள அறிக்கையை ஓகஸ்ட் அல்லது செப்ரெம்பர் வரை தாமதிக்கச் செய்யும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவியை இந்த விவகாரத்தில் எதிர்பார்க்கிறாரா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு அடுத்த சில மாதங்களில் அனைத்து நண்பர்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/97409.html
Geen opmerkingen:
Een reactie posten