தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 februari 2015

மகிந்த 89 ஆசனங்களை கைப்பற்றுவாரா?

58 லட்சம் வாக்குகள் மஹிந்தவிற்கு அளிக்கப்பட்டவையல்ல….

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பாரியளவிலான வாக்காளர் அடிப்படை நாடடில் காணப்படுகின்றது எனவும், யார் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருந்தாலும் கனிசமானளவு வாக்குகளை பெற்றுக் கொண்டிருப்பர் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஸவின் வாக்குகள் அனைத்தும் அவரது தனிப்பட்ட வாக்குகள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாரியளவில் மக்கள் ஆதரவு காணப்படுகின்றது, மிகச் சிறந்த ஆளுமை உடையவர் என்பவற்றில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ மக்களின் மனதுகளில் குடியிருக்கின்றார் என்பதும் உண்மையானதே என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது வாக்காளர் பலத்தை இழந்து விட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையும் வகையில் மஹிந்த ராஜபக்ஸ செயற்பட மாட்டார் என உறுதியாக நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சியை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையிலான தீர்மானங்ளை முன்னாள் ஜனாதிபதி எடுப்பார் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவைப் போன்றே தாமும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், கட்சிக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/97391.html

Facebook கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால்??

அதன் பிரகாரம் முகப்புத்தக (Facebook) கணக்கு உரிமையாளர் மரணமடைந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும் என்பதை அக்கணக்கின் உரிமையாளர் உயிருடன் இருக்கும் போதே தீர்மானித்துகொள்ள முடியும்.
அந்த அம்சத்தை Facebook’s legacy contact features என்றே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பவர் மரணமடைந்து விட்டதன் பின்னர் அக்கணக்கை முழுமையாக அழித்துவிட (Delete) முடியும்.
இல்லாவிட்டால் அக்கணக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்காக மற்றொருவருக்கு அக்கணக்கையே மாற்றுவதற்கு கணக்கு வைத்திருப்பவருக்கு சந்தர்ப்பம் உண்டு.
முகப்புத்தக கணக்கு வைத்திருப்பவர் அக்கணக்கை மற்றொருவருக்கு மாற்றினால்,
கணக்கு உரிமையாளர் மரணமடைந்ததன் பின்னர் அவரின் நினைவாக பதிவுகளை ஏற்றுவதற்கு புதிய நண்பர்களுக்கு அழைப்பு விடுவதற்கு, பதிலளிப்பதற்கு சுயவிபரகுறிப்பு படத்தை மாற்றுவதற்கு (profile picture) மற்றும் அட்டைப்படத்தை மாற்றுவதற்கு (cover photo) கணக்கை செயற்படுத்துபவருக்கு சந்தர்ப்பம் உண்டு.
எனினும், கணக்கை ஆரம்பத்தவரின் messages களை, அக்கணக்கை செயற்படுத்துபவரினால் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்காது. இதன் ஆரம்ப அம்சம் அமெரிக்காவில் மட்டுமே செயற்படுத்தப்படும். இதனை உலகளாவிய ரீதியில் வியாபிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கபடும் என்று முகப்புத்தக (Facebook) நிறுவனம் அறிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/97394.html

மகிந்த 89 ஆசனங்களை கைப்பற்றுவாரா?

இதேவேளை இம்முறை நடைபெற வுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வரலாறு காணாத வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை யகமான சிறிகொத்தவில் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை போட்டியிடச் செய்வதற்கு பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. அவ்வாறு மஹிந்த போட்டியிட்டால் 160 ஆசனங்களில் 89 ஆசனங்களை அவர் பெறுவார் என்று கூறப்படுகின்றது. இது ஐக்கிய தேசியக்கட்சிக்கு சவாலாக அமையாதா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கபீர் ஹாசிம்,
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைவோம் என்று பலர் கூறினர். குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடையும் என்றும் மஹிந்த அரசாங்கத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
நாம் அவர்களுக்கு மக்களின் வாக்குகளின் மூலம் பதில் கொடுத்துள்ளோம். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி யுள்ளோம்.
ஆகவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவது நிச்சயம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு சவாலாக இருந்த மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். அவ்வாறான நிலையில் இந்தத் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு அவர் ஒரு சவால் அல்ல.
ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு இலஞ்சம், சலுகைகள் வழங்கி வாக்குகளைப் பெற்றது மாத்திரமின்றி மக்களை அச்சுறுத்தி தொடர்ந்து இந்நாட்டில் அராஜக ஆட்சி புரியலாமென்று நினைத்தனர்.
அவற்றுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளமை தற்போது வெளிச்சமாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகள் கிடைத்தன. ஒரு சில தேர்தல் தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்திலே தோல்வியடைந்தோம். இம்முறை அந்தப் பிரதேசங்களிலும் வெற்றி பெறும் வகையில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
http://www.jvpnews.com/srilanka/97397.html

Geen opmerkingen:

Een reactie posten