[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 10:56.46 AM GMT ]
சுன்னாகம், தெல்லிப்பழை பகுதிகளில் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களால் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூட மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக குறித்த நிறுவனம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முறையீடுசெய்தது. இந்த மேன்முறையீடு மீதான பரிசீலனை இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நொதேர்ன் பவர் நிறுவனம் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்குமாறும், குறித்த நிறுவனத்தை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி விண்ணப்பம் செய்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணியான மணிவண்ணன், கடுமையான ஆட்சேபனையை முன்வைத்தார்.
இதனையடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்ற வழக்கேட்டினை மேல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு உத்தரவிட்ட மேல்நீதிமன்ற நீதிபதி, தடையுத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgx6.html
சுதந்திரக் கட்சிக்கு தேசிய அமைப்பாளர் தேவையில்லை!– ஜனாதிபதி ஐ.தே.க.வின் கைதி!- விதுர விக்ரமநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 11:04.49 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு டார்லி வீதியில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.
அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாளை நடைபெறும் கட்சியின் நிறைவேற்றுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். கட்சியின் நிர்வாக சபையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய நியமனங்களுக்கு நிறைவேற்று சபையின் கூட்டத்திற்கு பின்னர் நடைபெறும் அகில இலங்கை செயற்குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்த நிலையில், இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விதுர விக்ரமநாயக்க, கட்சியின் நிர்வாகிகளாக பண்டாரநாயக்கவின் கொள்கைக்கு ஏற்புடையவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடமையாற்றி வந்ததுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் அந்த பதவியை இராஜினாமா செய்தார்.
எதிர்க்கட்சியினர் திருடர்கள் என்கின்றனர், ஆனால் எவரும் பிடிபடவில்லை!– விதுர விக்ரமநாயக்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் கைதி என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைதியாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி முடக்க முயற்சித்து வருகிறார்.
அரசியல் இன்று கேலியாக மாறியுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர்.
அவர்களை திருடர்கள் எனக் கூறி சேறுபூசுகின்றனர். ஆனால் ஒரு திருடனும் பிடிபடவில்லை எனவும் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgx7.html
மியன்மாரில் கைதான இலங்கை மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 11:50.43 AM GMT ]
தூதரகங்கள் ஊடாக குறித்த மீனவர்களை விடுவிக்கும் வேலைகளை துரிதகதியில் மேற்கொள்ளுமாறு உள்நாட்டளுவல்கள் மற்றும் மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
திருகோணமலை மற்றும் குடாவெல்ல பகுதியில் இருந்து சென்ற 17 மீனவர்கள் இவ்வாறு கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில், கடந்த ஒக்டோபர் 6ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த மீனவர்களின் குடும்பங்கள் இன்று மீன்பிடி அமைச்சிற்கு சென்றிருந்தனர்.
இதன்போது அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, குறித்த குடும்பங்களை பராமரிக்க மாதாந்த நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு கூறினார்.
இலங்கைக்கு தேவை முதலீடு தான் கடனல்ல: லஷ்மன் கிரியெல்ல
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 12:14.49 PM GMT ]
முன்னைய அரசாங்கம் கடன் பெற்றே பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாக அவர் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் இந்திய முதலீடுகளை எதிர்பார்க்கிறது. முன்னைய அரசாங்கத்திற்கு முதலீடுகள் வரவில்லை. இருந்த முதலீடுகளும் குறைந்து போயின. கண்டியில் மட்டும் 22 தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் என்பன சர்வதேச கடனைப் பெற்றே செய்யப்பட்டன. நாட்டில் அநீதியை நீக்குவதற்கே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. முன்னைய அரசை போன்று எம்மால் நடந்துக்கொள்ள முடியாது.
இந்நாட்டில் நீதியையும் ஜனநாயகத்தையும் மேம்படுத்தவே நாங்கள் வந்தோம். மெதமுலன முறை போன்று இதனை முன்னெடுக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfo0.html
மைத்திரிபால சிறிசேனவின் தெரிவு சட்ட விரோதமானது: பேராசிரியர் நளின் டி சில்வா
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 12:27.15 PM GMT ]
“ஜாதிக பலய” அமைப்பினால், நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகிந்த இல்லாத நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைய தவறாக நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால், அவரால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் தவறானது என கருத முடியும் என்றால், அவரது நியமனம் தவறு என்றாலும் அது சம்பந்தமாக செயற்படக் கூடிய எதுவும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
மொஹான் பீரிஸின் நியமனம் சட்டவிரோதமாயின், அவரது நியமனத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்பும் செல்லுப்படியற்றதாகி விடும் என்பதால், நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலும், மைத்தி்ரிபால சிறிசேனவின் நியமனம் செல்லுப்படியற்றதாகி விடும் எனவும் நளின் டி சில்வா வாததத்தை முன்வைத்தார்.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்து, நிமால் சிறிபால டி சில்வாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததும் சட்டவிரோதமானதும் செல்லுப்படியற்றதுமான நியமனங்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஷிராணி பண்டாரநாயக்க நீக்கப்பட்ட விதம் குறித்து நாடாளுமன்றத்திற்கே கேள்வி எழுப்ப முடியும், ஜனாதிபதியினால் கேள்வி எழுப்ப முடியாது. இதனடிப்படையில், மொஹான் பீரிஸூக்கே அந்த பதவி இன்னும் உரித்தானது.
அத்துடன் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் இல்லாத நிலையில், இலங்கை இரண்டாக பிளவுப்படுத்து சமஷ்டி நாடாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமாயின் அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மக்கள் பிரதமராக தெரிவு செய்ய வேண்டும் என்றும் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdfo3.html
Geen opmerkingen:
Een reactie posten