தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

வடமாகாண சபையின் யோசனை தொடர்பில் தமிழகத்தில் கலப்பு உணர்வலைகள்

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 1000 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்க அமைச்சரவை தீர்மானம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:21.00 PM GMT ]
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
முதற்கட்டமாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வலவாய் கிராம சேவைப்பிரிவு J/284க்கு சொந்தமான 220 ஏக்கர் காணி மீள கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் என 1,022 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடு கட்ட நிதி வழங்கப்படும் எனவும் பாடசாலை, ஆரம்பப் பாடசாலை, வைத்தியசாலை, சமயஸ்தலங்கள், தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் இங்கு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும்.
மிகுதி 780 ஏக்கர்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது நிலங்களை இழந்து வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
யுத்தகாலத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 11,639 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவு நிலம் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை இராணுவப் படை வசம் 6,152 ஏக்கர் நிலம் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகின்றது.
தற்போதுள்ள 6152 ஏக்கர் நிலத்திலிருந்தே குறிப்பிட்ட மீள்குடியேற்றத்துக்கென 1000 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதேவேளை - கிழக்கு மாகாணத்தில் விமானப்படை உயர்பாதுகாப்பு வலயமான பானம பிரதேசத்தில் தற்போது கட்டிடங்கள் நிர்மானிக்கப்படுகின்ற 25 ஏக்கர் நிலம் தவிர்ந்த ஏனைய பகுதிகளை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தவிர்ந்த சம்பூர், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலும் மக்களது நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு கீழ் உள்ளன.
எனவே அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்படும் என்ற கொள்கைக்கு ஏற்ப இப்பிரதேச மக்களதும் நிலங்களை வழங்க கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கில் தேவையற்ற விதத்தில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் அதி உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்து அக்காணிகளை அங்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு மீளக் கையளிப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதி அளித்திருந்தனர்.
அதற்கமைய முதற்கட்ட நடவடிக்கையாக வடக்கு மாகாணத்தின் பலாலியில் உயர் பாதுகாப்பு வலயம் 1000 ஏக்கர்களால் குறைக்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgq6.html


அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்பட மாட்டாது: ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:37.01 PM GMT ]
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நடப்பு நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 40 உறுப்பினர்களே உள்ளனர்.
இந்தநிலையில் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்னெடுக்காது.
114 பேர் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்டமை ஒரு கண்காட்சி மாத்திரமே என்றும் அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgq7.html

மஹிந்தவின் தலைமையதிகாரி பல கோடி ரூபாய்கள் மோசடி - வருவாய்த்துறை திணைக்களத்திடம் முறைப்பாடு
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:17.51 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையதிகாரி காமினி சேனரத் மேற்கொண்ட ஊழல்கள் தொடர்பில், ஜாதிக ஹெல உறுமய இன்று தேசிய வருவாய் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்ததுள்ளது.
இதில் சேனரத் மேற்கொண்ட பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் அடக்கப்பட்டுள்ளன.
இதன்படி 2014ஆம் ஆண்டு சேனரத், ஜனாதிபதி செயலத்தில் இருந்து கறுப்புப்பணங்களை நான்கு கறுப்புப்பைகளில் இட்டு அவரின் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்பின்னர் அதே ஆண்டு நான்கு பைகளில் பெருந்தொகை கறுப்புப்பணத்தை இட்டு அவற்றையும் தமது வீட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார்.
இந்தநிலையில் கொழும்பில் 100கோடி ரூபாய்கள் செலவில் அவர் மாடி வீடு ஒன்றை அமைத்துள்ளார்.
இதனைதவிர தமது மாமியின் பெயரில் 100 கோடி ரூபாய்கள் செலவில் வீடு ஒன்றை அவர் அமைத்துள்ளார்.
மாலபேயில் பல ஏக்கர் காணியில் 100 கோடிரூபாவில் கைத்தொழில் மையம் ஒன்றை சேனரத் அமைத்துள்ளார்.
பொல்கொடவிலும் அவருக்கு காணி இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.
சீனர்கள் இருவரிடம் இருந்து சுமார் 200 மில்லியன் ரூபாய்களை அவர் பெற்றுள்ளார்.
இந்தநிலையில் தமது முறைப்பாட்டை விசாரணை செய்து ஒரு மாதத்துக்குள் பதில் தருமாறு ஜாதிக ஹெல உறுமய, தேசிய வருவாய்த்துறை திணைக்களத்திடம் கோரியுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க தலைமையிலான குழுவினரே இன்று இந்த முறைப்பாட்டை முன்வைத்தனர்.


வடமாகாண சபையின் யோசனை தொடர்பில் தமிழகத்தில் கலப்பு உணர்வலைகள்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 12:59.51 PM GMT ]
கடந்த 60 வருடங்களாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சபை நிறைவேற்றிய யோசனை தொடர்பில் தெ ஹிந்து தமிழகத்தின் உணர்வலைகளை செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதன்படி சில கட்சிகள் இந்த யோசனையை வரவேற்றுள்ளதாக தெ ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழம் இந்த யோசனை தொடர்பில் உடனடியாக கருத்துக்களை வெளியிடவில்லை.
திராவிட முன்னேற்றக்கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் என்பன புதிய மைத்திரிபாலவின் அரசாங்கத்துக்கு நல்லிணக்கத்தை கொண்டு வர இன்னும் சில காலத்தை வழங்கிப் பார்க்கலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பேச்சாளர் டி.கே.எஸ் இளங்கோவன், தமது கருத்தில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று சிறிது காலமே நிறைவடைந்துள்ளமையால், அதற்கு சிறிது காலத்தை வழங்கியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன இந்த யோசனையை வரவேற்றுள்ளன.
இலங்கை அரசாங்கங்கள் சர்வதேச விசாரணைகளை மழுங்கடிப்பதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் வடமாகாண சபையின் யோசனை வரவேற்கத்தக்கது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை.கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமிழக அரசாங்கமும் வடமாகாண சபையின் யோசனைக்கு ஆதரவாக யோசனை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று கோபாலசாமி கோரியுள்ளார்.
இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளில் ஒரு பிரிவினர், இந்த யோசனையை வரவேற்றுள்ளனர். மறுபிரிவினர் இது தற்போதைய பிரச்சினையை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்து ஈழம் தமிழ் நட்புரிமை நிலையத்தின் தலைவர் காசி ஆனந்தன், வடமாகாண சபையின் யோசனை, தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபர் எஸ்.சி.சந்திரரஹாசன் கருத்து எதனையும் கூற மறுத்துவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgq4.html

அன்று தனிநாடு தீர்மானம் வந்ததால் பல லட்சம் மக்கள் இனப்படுகொலை இந்தியாவால் செய்யப்பட்டனர்!இன்று நடந்தது இனப்படுகொலை என்று நிறைவேறிய தீர்மானத்தால் என்ன ஆகுமோ!இந்தியாவை பிரித்து தமிழ் நாட்டை தனியாக்குமா??!!

Geen opmerkingen:

Een reactie posten