தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

இந்திய மீனவர்களினால் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்



சர்வதேச சமூகத்துடன் நட்புறவைப் புதுப்பித்துக் கொள்ள இலங்கை ஆர்வம்: மங்கள சமரவீர
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:41.26 PM GMT ]
இலங்கை மக்களின் மேம்பாட்டிற்கு உலகம் வழங்க கூடிய அதிசிறந்த நலங்களை பெற்று கொள்வதன் பொருட்டு உலகத்தை அரவணைத்து எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மங்கள தனது உரையில்,
1948ஆம் ஆண்டில் சுதந்திரத்தை பெற்றதன் பின்னர் இலங்கையானது, உலகத்துடன் தனது தொடர்பை முன் எடுத்து சென்றுள்ளதுடன் “யாவருடனும் நட்புறவை பேணுதலும் எவருடனும் பகைமை பாராட்டாமல் இருத்தலும்” என்ற அடிப்படையிலான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை பின்பற்றுவதில் பெருமை அடைந்துள்ளது.
கடல் சட்டம் பற்றிய மாநாடு, ஆயுதக் களைவு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கி விதிமுறைகள் வகுத்தல் நடைமுறைகளில் முன்னணியை வகுத்து பல்வேறு திறன்களில் ஐக்கிய நாடுகள் சபை முறைமைக்கு தொடர்ச்சியான பங்களிப்பை செய்துள்ளதுடன் இற்றை வரைக்கும் சமாதானத்தைப் பேணும் செயற்பாடுகளுக்கான பங்களிப்பை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கின்றது.
சில ஆண்டுகளாக பாரம்பரிய வெளிநாட்டுக் கொள்கையிலிருந்து இலங்கையின் குணவியல்பிற்கு மாறான விடயமாகலிருந்தது. தற்போது இலங்கை உலக சமூகத்துடன் தனது ஈடுபாட்டை புதுப்பிப்பதற்கு நாட்டம் கொண்டுள்ளது.
நாளைக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளரை நான் சந்திக்கும் போது அவரை இலங்கைக்கு விஜயம் புரியுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
எனவே ஜனாதிபதி சிறிசேன அவர்களினதும் பிரதமர் விக்கிரமசிங்க அவர்களினதும் அரசாங்கமானது சர்வதேச சமூகத்துடன் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாட்டுக் கொள்கை ஒன்றை பின்பற்றுகின்றது.
உலகை ஓர் அச்சுறுத்தலாக கருதாமல் ஓர் வாய்ப்பாகவே நோக்குகின்றதும். நாம் இலங்கை மக்களின் மேம்பாட்டிற்கு உலகம் வழங்க கூடிய அதிசிறந்த நலங்களை பெற்று கொள்வதன் பொருட்டு உலகத்தை அரவணைத்து எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.
இலட்சியத்தை அடிப்படையாக கொள்ளாமல் எமது மக்களின் தேவைகளின் மீதான அடிப்படையில் எமது வெளிநாட்டுக் கொள்கையானது ஓர் பகுத்தறிவுக்கு ஏற்ற வெளிநாட்டு கொள்கையாக இருக்கும்.
அரசாங்கமானது 100 நாள் திட்டத்தை வாக்குறுதியளித்துள்ளதன் பிரகாரம் நடைமுறைப்படுத்துவதிலும் உலகத்துடனான தனது தொடர்பை புதுப்பிப்பதற்கான முயற்சிகளிலும் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் பங்களிப்பையும் புரிந்துணர்வையும் வேண்டுகின்றது.
அத்துடன், வியாபாரத்தையும் முதலீட்டையும் அதிகரிப்பதன் மூலம் இலங்கைக்கு உதவி வழங்குங்கள்.
இலங்கையில் திறக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் மீது முதலீடு செய்யுமாறு தங்களுடைய தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குங்கள்.
இந்த நாட்டின் பொருளாதார நிலைமையின் மோசமான நிலைமையை குறைப்பதில் வேலை வாய்ப்பை உருவாக்குதல் முக்கியமான விடயமாகும்.
அதிகரித்த வியாபார மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் நல்லிணக்க நடைமுறைக்கு உதவும் முக்கியமான காரணிகளாகும் என்பதுடன் இவை இலங்கையின் நிலைபேறான வளர்ச்சிக்கும் சமாதானத்திற்கும் அபிவிருத்திற்கும் மிகவும் முக்கியமாகவுள்ள அதன் வெற்றியை உறுதிப்படுத்தும்.
இதேவேளை, மனித உரிமைகள் சமூகத்தையும் உள்ளடக்கி சர்வதேச சமூகத்தை பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்திக் கூறுகின்றேன்.
இலங்கை அரசாங்கமானது அதன் பிரஜைகள் யாவரினதும் மனித உரிமைகளை மேன்படுத்துவதையும் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துகின்ற வேளையில் ஜனநாயகத்தினதும் நல்லாட்சியினதும் சட்ட ஆட்சியினதும் பிரயாணமானது வெற்றியடைவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது.
ஆனால் இப்பிரயாணத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பங்குபற்றுதல் அத்தியவசியமான ஓர் உணர்ச்சிபூர்வமான நடைமுறையாகும்.
இன்னும் இந்த நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சில கடும்போக்காளர்கள் இருக்கின்றனர். இவர்கள் இயல்பான காரணங்கள் நிமித்தம் இப்பிரயாணத்தை தடம்புரள வைக்க நினைக்கின்றனர்.
எனவே தேசிய நல்லிணக்கம், காயத்தை ஆற வைத்தல், நிறுவன ரீதியான கட்டியெழுப்புகை மற்றும் உண்மையான இலங்கையர் என அடையாளப் படுத்தல் பற்றிய இந்த பிரயாணத்திற்கு ஆதரவு வழங்குகின்ற வேளையில் எமக்கு கால அவகாசத்தையும் இடைவெளியையும் வழங்குமாறும் நான் வலியுறுத்திக் கூறுகின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgry.html

இந்திய மீனவர்களினால் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 01:47.32 PM GMT ]
இந்திய மீனவர்களின் வருகையால் எமது மீனவர்கள்; எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதில் மத்திய மீன்பிடி அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, வட மாகாண ஆளுனர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன, இலங்கை கடற்படை பொறுப்பதிகாரி மற்றும் அமைச்சின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த சிலதினங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த மத்திய மீன்பிடி அமைச்சரிடம் இந்திய மீனவர்களின் வருகையால் வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள, எமது மீனவர்களின் தடைசெய்யப்பட்ட தொழில் முறையால் கடல் வளம் அழிக்கப்படுவதையும், இதனால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் வடபகுதி மீனவர்கள் வறுமைக்கோட்டுக்குள் இருப்பதாகவும் அவர்களுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகளை செய்ய வேண்டியுள்ளது எனவும் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் எடுத்துக்கூறப்பட்டது.
இதற்கு அமைவாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய மீனவர்களின் வருகையால் எமது கடல் வளம் அழிக்கப்படுவதுடன் எமது மீனவர்களின் தொழில் உபகரணங்களும் அழிக்கப்படுகின்றன.
இதனால் எமது வடபகுதி மீனவ மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாவதுடன் வாழ்வாதாரத்திலும் பின் நோக்கி செல்கின்றனர் என்றும் இதற்கு இரண்டு நாடுகளுக்குமிடையில் உள்ள உறவுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அத்துடன் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை நிறுத்துவதற்கும் அதற்குரிய மாற்று வழிகளை மேற்கொள்வதற்கும் போதிய பொருளாதார வசதிகளை வடபகுதி மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தனது இந்திய விஜயத்தின் போது கூடிய கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், கொக்கிளாய் கடற்பகுதியில் அத்துமீறி தடை செய்யப்பட்ட தொழில் முறைகளைக் கையாண்டு வருகின்ற அனைவருக்கும் உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி கூறியிருப்பதாக அறிய முடிகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgrz.html

Geen opmerkingen:

Een reactie posten