தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 12 februari 2015

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் தவறு செய்தவர்கள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படவில்லை: கோத்தபாய

ஐக்கிய தேசியக் கட்சியை அமைக்க அழுத்தம் கொடுக்கப் போவதில்லை: ரணில்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 12:26.55 PM GMT ]
பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தாம் அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலின் பின்னர் அனைத்துக்கட்சி அரசாங்கமே உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் இன்று இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ரணில், நாட்டை சரியான பாதைக்கு கொண்டு செல்லவேண்டியது அனைத்துக் கட்சிகளினதும் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
பொதுமக்கள் தம்மிடம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அல்லது மஹிந்த எதிர்ப்பு அரசாங்கத்தையா அமைக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்கின்றனர்.
எனினும் தம்மை பொறுத்தவரை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் தமது அரசாங்கத்துக்குள் இருப்பதையே விரும்புவதாக ரணில் மாணவர்களின் கரகோசத்துக்கு மத்தியில் குறிப்பிட்டார்.
போரின் பின்னர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கத்தின் கடமையாக உள்ளது.
இந்தநிலையில் தம்மை பொறுத்தவரையில் அனைத்து அரசியல் கட்சிகளுடன் பணியாற்றுவதே சவாலாக உள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgq1.html


தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு கோரி மஸ்கெலியா மக்கள் ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 12:31.51 PM GMT ]
மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தின் தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு கோரி, அத்தோட்டத்தில் உள்ள ஏழு பிரிவுகளைச் சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட மக்கள் இன்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நண்பகல் 12 மணியளவில் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பின்னர் மஸ்கெலியா சாமிமலை பிரதான தோட்ட தொழிற்சாலைக்கு முன்பு இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில், தோட்ட அதிகாரியான நாலக்க வித்தானகே, தோட்டத்தில் பணிபுரியும் சேவையாளர்களை பல சிரமத்துக்குள்ளாக்கியுள்ளார் என்றும் அவருக்கு அடி பணிந்து போகாதவர்களை பழி வாங்குகின்றார் என்றும் தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளிகளுக்கும் சேவையாளர்களுக்கும் பல இடையூறுகளை தோட்ட அதிகாரி செய்தார் என்று தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இனிமேலும் இவ் அதிகாரி வெளியேறாவிட்டால் தாங்கள் தோட்டங்களில் வேலை செய்ய செல்ல மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
எனினும் கடந்த சில தினங்களில் மேற்படி தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினாலும் தோட்ட தொழிலாளிகளினாலும் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgq2.html

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் தவறு செய்தவர்கள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படவில்லை: கோத்தபாய
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 12:49.52 PM GMT ]
தமது பணிகளை ஈடுசெய்ய எவருக்கும் முடியாது என்று முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாம் அரசியல்வாதி அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அரச சேவையாளராகவே தாம் பணியாற்றியதாக கூறியுள்ளார்.
தமது கடும் உழைப்பு மற்றும் பணிகளை ஈடுசெய்ய எவராவது நினைத்தால் இது முடியாத காரியம் என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தாம் மாலைதீவுக்கு சென்றதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.  ஜனாதிபதி தேர்தல் முடிந்தது முதல் தாம் இலங்கையிலேயே தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் வங்கிக் கணக்கில் தமது பெயரில் பெருந்தொகை பணம் இருந்ததாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளமையை கோத்தபாய மறுத்துள்ளார்.
புலனாய்வுத்துறையினரால் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே கே.பி என்ற குமரன் பத்மநாதனை அரசாங்கம் வித்தியாசமான முறையில் நடத்தியதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
அவரை, இராணுவ புலனாய்வின் கண்காணிப்பின்கீழ் நடமாடச் செய்வதன் மூலமே விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டுபிடிக்க முடியும் என்ற அடிப்படையிலேயே தமது செயற்பாடு இருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தவறு செய்த அமைச்சர்களை உரிய நேரத்தில் தண்டிக்காமை காரணமாகவே, மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போனது என்ற கருத்தை கோத்தபாய ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் அது தமது பணியல்ல என்று கூறியுள்ள அவர், தாம் தமது பணிகளை ஒழுங்காகவே மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் கோத்தபாய சிரித்துக் கொண்டே குறிப்பிட்டதாக ஆங்கில இதழ் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgq3.html

Geen opmerkingen:

Een reactie posten