தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

மகிந்த பதுக்கிய பணம் குறித்து அமைச்சர் பீ.ஹரிஸன் கிண்டல்

சந்திரிக்கா உள்ளவரை மகிந்த அரசியலில் இல்லை: நளின் பண்டார
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 11:08.43 AM GMT ]
சந்திரிக்கா குமாரதுங்க உள்ளவரை மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குவரும் விளையாட்டு சரி வராது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கு கூட்டணியினுள் உள்ள சுதந்திர கட்சி அல்லாத சிலர் தடுமாறுகிறார்கள்.
எங்கள் பிரதருக்கு எதிராக சவாலான ஒருவர் தற்பொழுது அரசியலில் இல்லை என்பதனால் தான் இந்த தடுமாற்றம்.
ஆனால் எங்களுக்கு தெரியும் சந்திரிக்கா உள்ளவரை எதிர்க்கட்சியில் ஒவ்வொருவராக ஒருவரை அழைத்துவர இடமளிக்க மாட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சவால் விடுவதற்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒருவரும் இல்லை.
பிரதமருக்கு சவால் விடுவதென்றால் மரித்த ஒருவரை உயிரோடு கொண்டு வரவதற்கு சமம் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdht3.html

மகிந்த பதுக்கிய பணம் குறித்து அமைச்சர் பீ.ஹரிஸன் கிண்டல்
[ புதன்கிழமை, 11 பெப்ரவரி 2015, 11:46.31 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதுக்கிய 10,000 கோடி ரூபாய் பணத்தில் 500 ரூபாய் தாள்களை கீரையாக சமைத்து சாப்பிட்டாலும் செலவு செய்ய முடியாது என அமைச்சர் பீ.ஹரிஸன் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட நிவாரணம் வழங்கிய போது வேறு பணம் இருக்கவில்லை.
மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஒதுக்கிய 10,000 கோடி ரூபாய் பணத்தில், 9,800 கோடி ரூபாயும் மக்களுக்காக வழங்கிய வரவு செலவு திட்ட நிவாரணமே இந்த 2015 வரவு செலவு திட்ட நிவாரணம்.
மகிந்த ராஜபகச எவ்வாறான ஒரு சாப்பாடு சாப்பிட்டிருக்க கூடும்.
500ரூபாய் தாள்களை கீரையாக சமைத்து சாப்பிட்டாலும் அந்த 10,000 கோடி ரூபாவை செலவு செய்துவிட முடியுமா என அனுராதபுரத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு பீ.ஹரிஸன் கேள்வி எழுப்பியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdht4.html

Geen opmerkingen:

Een reactie posten